CBSE job: மத்திய அரசு வேலை.. சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பு.. 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கும் வேலை இருக்கு
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இ-யில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை கணக்காளர், இளநிலை உதவியாளர் உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதல் டிகிரி முடித்தவர்கள் வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. 1929 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிபிஎஸ்இ- வரையறுக்கும் பாடத்திட்டத்தை பின்பற்றி நாடு முழுவதும் மத்திய அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிபிஎஸ்இ-யில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
குரூப் ஏ
உதவி செயலாளர் - 08
உதவி பேராசிரியர் & உதவி இயக்குநர் (கல்வி) - 12
உதவி பேராசிரியர் & உதவி இயக்குநர் (பயிற்சி) - 08
உதவி பேராசிரியர் & உதவி இயக்குநர் (திறன் கல்வி) - 07
கணக்கு அலுவலர் - 02
குரூப் -பி
கண்காணிப்பாளர் (Superintendent) - 27
இளநிலை மொழிபெயர்ப்பு அலுவலர் - 09
குரூப் சி
இளநிலை கணக்காளர் - 16
இளநிலை உதவியாளர் - 35
கல்வித் தகுதி:
* உதவி செயலர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்தால் போதும்.
* உதவி பேராசிரியர் & உதவி இயக்குநர்: முதுகலை பட்டத்தில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பிஎட்,எம்.எட் அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* ஜூனியர் அக்கவுண்டட் பணி: 12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். அக்கவுண்டசி/ பிசினஸ் ஸ்டடிஸ்/ பொருளாதாரம்/ வணிகம்/ நிதி/ வணிக நிர்வாகம்/ காஸ்ட் அக்கவுண்டிங் ஆகிய உள்ளிட்ட பாடப்பிரிவுகளை எடுத்து படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். டைப்பிங் திறன் அவசியம்.
* ஜூனியர் அசிஸ்டண்ட் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது இந்தியில் ஒரு நிமிடத்தில் 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் அவசியம்.
* தேர்வர்கள் கல்வி தகுதி பற்றிய விரிவான மற்றும் முழுமையான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவ்ப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
22.12.2025 தேதிப்படி உதவி செயலர், அக்கவுண்ட் ஆபிசர் பணிக்கு அதிகபட்சமாக 35 வயது வரை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் அக்கவுண்டட், ஜூனியர் அசிஸ்டண்ட் பணிக்கு 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குரூப் பி பணிக்கு 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை
MCQ அடிப்படையிலான முதல் நிலை தேர்வு, ஆப்ஜெக்டிவ் டைப் மற்றும் விரிவாக்கம் செய்து எழுதக்கூடிய மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று கட்ட தேர்வுகளுக்கு பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கட்டணமாக குரூப் ஏ பணியிடங்களுக்கு 1,750- ம் குரூப் பி&சி பணியிடங்களுக்கு ரூ.1,050 -ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 22.12.2025 கடைசி நாளாகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பு தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து உறுதி செர்ய்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications