சென்ட்ரல் வங்கியில் மேனேஜர் வேலை.. மாதம் 1.35 லட்சம் சம்பளம்.. செம சான்ஸ்.. விட்றாதீங்க
சென்னை: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி பொது மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.1.35 லட்சம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிகலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று சென்ட்ரல் வங்கி. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. தமிழகத்திலும் இதன் கிளைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான ஊழியர்களுடன் இந்த வங்கியானது இயங்கி வருகிறது. சென்ட்ரல் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படும்.

பணியிடங்கள் விவரம்
அந்த வகையில் தற்போது வங்கியில் காலியாக உள்ள உதவி பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசுப் பணிகள் பிரிவின் கீழ், நிரந்தர அடிப்படையில் மொத்தம் 15 உதவிப் பொது மேலாளர் (நிலை V) பதவிகள் நிரப்பப்பட உள்ளன. பணியானது மும்பை உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் BE/B.Tech, B.Sc, MBA, CA/CFA/CMA போன்ற தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித்தகுதியானது கேட்கப்பட்டுள்ளது. பணி அனுபவமும் கேட்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் இதனை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு
வயது வரம்பை பொறுத்தவரை 17.05.2026 அன்று நிலவரப்படி கணக்கில் எடுக்கப்படும். குறைந்தபட்சம் 33 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC (NCL) பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு (பொதுப்பிரிவு) 10 ஆண்டுகள், (OBC NCL) பிரிவினருக்கு 13 ஆண்டுகள், (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள் உச்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
சம்பளத்தை பொறுத்தவரை உதவிப் பொது மேலாளர் பதவிக்கு ரூ.1,20,940/- முதல் ரூ.1,35,020/- வரை வழங்கப்படும்.
தேர்வு முறை:
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
SC/ST/முன்னாள் ராணுவத்தினர்கள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175/- ஆகும். மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.850/ ஆகும். கட்டணங்களை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (https://centralbank.bank.in/) வழங்கப்பட்டுள்ள இணைப்பு வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கும் நாள் 30.04.2026 ஆகும். விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2026 ஆகும். கடைசி தேதிக்குப் பிறகு ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் எந்தவித புதியப் பதிவு அல்லது திருத்தங்களும் அனுமதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://centralbank.bank.in/sites/default/files/Recruitment%20Process%20for%20selection%20of%20Assistant%20General%20Manager%20in%20Specialist%20Category%20in%20Risk%20Management%2C%20Finance%20%26%20Accounts%20and%20Credit.pdf
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications