Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை தாம்பரத்தில் பணியிடம்.. மத்திய அரசு வேலை! பிளஸ் டூ முடிச்சிருக்கீங்களா? தூள் கிளப்புங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசுக்கு (Central Government job) சொந்தமான சென்னை தாம்பரத்தில்உள்ள சித்தா ஆராய்ச்சி கவுன்சில் (CCRS) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி அலுவலர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.1.77 லட்சம் வரை வழங்கப்படும்.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சித்தா ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை தாம்பரத்தில் சித்தா ஆராய்ச்சி கவுன்சில் (CCRS) செயல்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு சொந்தமான இந்த கவுன்சில் சித்தா ஆயுர்வேத மருந்துகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.

Central Government job CCRS Recruitment Drive 2026 14 Vacancies to Be Filled

ஆயுர்வேத கவுன்சிலில் காலியாக உள்ள 14 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்;

* ஆராய்ச்சி அலுவலர் (சித்தா) - 02
* ஆராய்ச்சி உதவியாளர் (வேதியியல்) - 02
* மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் (MLT) - 09
* ஆய்வக உதவியாளர் - 01 என மொத்தம் 14 காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

* ஆராய்ச்சி அலுவலர் (சித்தா) - பதவிக்கு NCISM அங்கீகரித்த கல்வி நிறுவனம் ஒன்றில் இருந்து சித்த மருத்துவ முறையில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மத்திய / மாநில இந்திய மருத்துவ (சித்தா) பதிவேட்டில் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

*ஆராய்ச்சி உதவியாளர் (வேதியியல்) - பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனம் ஒன்றில் சம்பந்தப்பட்ட துறையில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்த பின்,

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / கல்லூரி / பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் ஆராய்ச்சி அல்லது கற்பித்தல் அனுபவம் இருக்க வேண்டும். துறை சார்ந்த பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனம் ஒன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

* மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் - பணிக்கு மெடிக்கல் லேபரட்டரி சயின்ஸ் (Medical Laboratory Science) துறையில் இளங்கலை பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

* ஆய்வக உதவியாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அறிவியல் பாடத்து படித்து இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பணியாற்றிய அனுபவம் அவசியம்.

வயது வரம்பு:

* ஆராய்ச்சி அலுவலர் (சித்தா) - 40
* ஆராய்ச்சி உதவியாளர் (வேதியியல்) - 30
* மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் (MLT) - 35
* ஆய்வக உதவியாளர் - 25

சம்பளம் எவ்வளவு?

* ஆராய்ச்சி அலுவலர் (சித்தா) - சம்பளம்: ரூ. 56,100 - 1,77,500
* ஆராய்ச்சி உதவியாளர் (வேதியியல்) -ரூ. 35,400 - 1,12,400
* மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் (MLT) - ரூ. 35,400 - 1,12,400
* ஆய்வக உதவியாளர் - ரூ. 19,900 - 63,200

தேர்வு முறை:

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். 'https://siddhacouncil.com என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

முறையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து
The Director General,
Central Council for Research in Siddha,
Ministry of Ayush,
GST Road, Tambaram Sanatorium,
Chennai - 600047.

என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 31.03.2026 கடைசி நாளாகும். அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படிக்க: https://siddhacouncil.com/ccrs/?page_id=16

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+