மத்திய அரசு வேலை.. 542 காலிப்பணியிடங்கள்! ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. செம சான்ஸ்!
சென்னை: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிஆர்ஓ எனப்படும் எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள 542 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
பிஆர்ஓ எனப்படும் எல்லை சாலைகள் அமைப்பு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பாகும். நாட்டின் எல்லையோர பகுதிகளில் சாலைகளை அமைத்தல், சாலை பழுதுகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

பணியிடங்கள் விவரம்:
இந்த பிஆர்ஓ அமைப்பில் காலியாக உள்ள 542 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, வயது வரம்பு போன்ற விவரங்களை பார்க்கலாம்.
வாகன மெக்கானிக் - 324
MSW (பெயிண்டர்) - 13
MSW (டிரைவர் எஞ்சின்) - 205 என மொத்தம் 542 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுடன் துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ பயிற்சி முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 18 வயது முதல் 25 வயது வரை. அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.
தேர்வு முறை:
உடல் தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பதாரர்கள் https://bro.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு அறிவிப்பை படித்துவிட்டு அதில் உள்ள விண்ணப்பத்தை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தை இந்தி அல்லது ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Commandant,
GREF Centre,
Dighi Camp,
Pune - 411015 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
விண்ணப்பிக்க வரும் 24.11.2025 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பை படித்து உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications