மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்!
சென்னை: மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பில் 899 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு யார் யார் விண்ணப்பிக்க முடியும் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டின் எல்லையோர பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணியை இந்த பார்டர் ரோடு ஆர்கனிஷேஷன் மேற்கொள்கிறது.

நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்புக்கு மிக முக்கியமான சாலைகள் என்பதால் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் சாலைகளை அமைப்பது, வடிவமைப்பது போன்ற பணிகளை இந்த அமைப்பே மேற்கொள்கிறது. இந்த அமைப்பில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்ற விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
டிராஃப்ட்ஸ்மேன் (Draughtsman) - 42 பணியிடங்கள்
இந்தி டைப்பிஸ்ட் (Hindi Typist) - 10
ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் (Store Keeper Technical - SKT) - 100
தகவல் தொடர்பு இயக்குநர் (Operator Communication) - 261
இயந்திர இயக்குநர் (Operator Excavating Machinery - OEM) ) - 207
எலக்ட்ரீஷியன் (Electrician) - 79
என மொத்தம் 899 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். டிராஃப்ட்ஸ்மேன் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து 10, +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியலை ஒரு பாடமாக எடுத்து படித்து இருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து கட்டிடக்கலை அல்லது டிராஃப்ட்ஸ்மேன்ஷிப் துறையில் 2 ஆண்டு சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து டிராஃப்ட்ஸ்மேன் (சிவில்) துறையில் 2 ஆண்டு தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ்பெற்றிருக்க வேண்டும். மேலும், அந்தத் தொழிலில் 1 ஆண்டு நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தி டைப்பிஸ்ட்: 12 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் கணினியில் இந்தி மொழியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் இருக்க வேண்டும்
ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல்: பிளஸ் டூ தகுதியுடன் வாகனங்கள் மற்றும் பொறியியல் உபகரணங்கள் தொடர்பான Store Keeping பணிகள் குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்
எலக்ட்ரிஷியன்: எலக்ட்ரிஷியன் பணிக்கு 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ அல்லது அதற்கு இணையான நிறுவனத்தில் இருந்து ஆட்டோ எலக்ட்ரீஷியன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், எலக்ட்ரீஷியனாக குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18-வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு:
சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 20,200 முதல் வழங்கப்படும்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, உடல் தகுதி, உடல் அளவீடு தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ 50 செலுத்த வேண்டும், எஸ்சி /எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
"www.bro.gov.in" என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்து Commandant, GREF Centre, Dighi Camp, Pune- 411015 என்ற முகவரிக்கு தபால் வழியாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வரும் 04.07.2026 கடைசி நாளாகும். தேர்வு அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்த பிறகு தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பை படிக்க: https://bro.gov.in/frontend/images/recruitments/recruitment_200526171410.pdf.pdf
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?














Click it and Unblock the Notifications