மத்திய அரசு வேலை.. 243 பணியிடங்கள்.. 1.77 லட்சம் சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தேசிய தகவலியல் மையத்தில் 243 சயின்டிஸ்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசு பணியாகும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.56 ஆயிரம் முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.
தேசிய தகவலியல் மையம் (NIC) என்பது மத்திய அரசின் முக்கியமான தகவல் தொழில்நுட்ப (IT) அமைப்பாகும். 1976 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட NIC, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நிர்வாகத்தை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. அரசுத் துறைகளுக்கு e-Governance சேவைகள் வழங்குதல், அரசு இணையதளங்கள், போர்டல்கள் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறது.

பணியிடங்கள் விவரம்
தற்போது தேசிய தகவல் மையத்தில் 243 சயின்டிஸ்ட்-பி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்கள் கேட் (GATE) மதிப்பெண் அட்டை மூலம் நிரப்பப்படவுள்ளன.
* கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் - 168 பணியிடங்கள், * மின்னணுவியல் மற்றும் தகவல்தொடர்புகள் - 25 பணியிடங்கள்,
* தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு - 50 பணியிடங்கள்
கல்வித் தகுதி:
பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கேட் (GATE) 2024, 2025 அல்லது 2026 ஆம் ஆண்டு மதிப்பெண் பெற்றிருப்பதும் கட்டாயமாகும்.
மாற்றுத் தகுதிகளாக, கணினி படிப்புகளுக்கான மின்னணுவியல் மற்றும் அங்கீகாரத் துறையின் பி-நிலை (B-level), இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியர்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர்கள் பட்டதாரி நிறுவனத்தின் அசோசியேட் உறுப்பினர் தகுதியும் ஏற்கப்படும்.
இத்துடன், அறிவியல் முதுகலைப் பட்டம் (MSc), கணினி பயன்பாட்டில் முதுகலைப் பட்டம் (MCA), பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் (ME / M.Tech), அல்லது தத்துவத்தில் முதுகலைப் பட்டம் (M Phil) பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இந்த தகுதிகள் அனைத்தும் மேலே குறிப்பிடப்பட்ட மூன்று சயின்டிஸ்ட்-பி பிரிவுகளுக்கும் பொதுவானதாகும்.
- சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கும் ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல்
- கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்?
- நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!
- தமிழக சட்டசபை தேர்தல் 2026.. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. 4 நாட்களே செய்ய முடியும்!
- புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க
வயது வரம்பு:
30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு மார்ச் 31, 2026 நிலவரப்படி கணக்கிடப்படும்.
பட்டியல் சாதி (SC/ST) மற்றும் பழங்குடியினருக்கு (ST) 5 ஆண்டுகள், மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC - NCL) 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு
சம்பளத்தை பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு லெவல் 10 ஊதிய விகிதத்தின்படி மாத ஊதயமாக ₹56,100 முதல் ₹1,77,500 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை
தேர்வு முறையை பொறுத்தவரை, கேட் (GATE) 2024, 2025 அல்லது 2026 ஆம் ஆண்டு மதிப்பெண்கள் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து நடைபெறும் தனிப்பட்ட நேர்காணல் (Personal Interaction/Interview) அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான ஹால் டிக்கெட்டுகள் தனிப்பட்ட நேர்காணல் தேதிக்கு 4 முதல் 7 நாட்களுக்கு முன்னர் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் இணையதளம் வாயிலாக செலுத்தப்பட வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், பட்டியல் சாதி (SC), பழங்குடியினர் (ST) மற்றும் மாற்றுத்திறனாளி (PWD) விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ₹800 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேசிய தகவலியல் மையத்தின் https://recruitment.nic.in/ என்ற இணையதளத்தின் 'Careers' பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றுவது அவசியம்.
ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், தேசிய தகவலியல் மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://recruitment.nic.in/ வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு மார்ச் 27, 2026 அன்று தொடங்கி ஏப்ரல் 24, 2026 அன்று முடிவடைகிறது.
-
அரசு வேலை.. தாமதம் இருக்காது.. உடனே 1.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.. திமுக தேர்தல் அறிக்கை -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்














Click it and Unblock the Notifications