மாதம் ரூ.60,000 ரூ.1 லட்சம் சம்பளம்.. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் அசத்தலான பணி! ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் கன்சல்டன்ட் பணிக்கு மாதம் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் சம்பளம் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பை படித்தவர்கள் இந்த பணிக்கு பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகிறது.

 Central pollution control board recruitment 2023 for Consultants post

அந்த வகையில் தற்போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் கன்சல்டன்ட் பணிக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள்: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் கன்சல்டன்ட் ஏ பணிக்கு 19 பேர், கன்சல்டன்ட் பி பணிக்கு 52 பேர், கன்சல்டன்ட் சி பணிக்கு 3 பேர் என மொத்தம் 74 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.09.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

மாதசம்பளம்: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.60 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்படும். பணி வாரியாக பார்த்தால் கன்சல்டன்ட் ஏ பணிக்கு மாதம் ரூ.60 ஆயிரம், கன்சல்டன்ட் பி பணிக்கு மாதம் ரூ.80 ஆயிரம், கன்சல்டன்ட் சி பணிக்கு மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

கல்வி தகுதி: பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் முதுகலை படிப்பில் Environmental Engineering, Environmental technology, Environmental Science அல்லது இளங்கலை பிரிவில் Environmental Engineering படிப்பை முடித்து எம்எஸ் ஆபிசில் பணி செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும் கன்சல்டன்ட் ஏ பணிக்கு Field of Environmental Pollution Management/control பிரிவில் 3 முதல் 5 ஆண்டும், கன்சல்டன்ட் பி பணிக்கு 5 முதல் 10 ஆண்டும், கன்சல்டன்ட் சி பணிக்கு 10 முதல் 15 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் இந்த துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளும் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.cpcb.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் அக்டோபர் மாதம் 10ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஆந்திரா, அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மத்திய பிரதேசம், நாகலாந்து, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

மேலும் இது ஒரு தற்காலிக பணியாகும். தற்போது பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஓராண்டு வரை பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு அவர்களின் செயல்பாட்டை பொறுத்து பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+