நோ எக்ஸாம்.. ரூ.30,000 மாத சம்பளம்.. சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் வேலை வேண்டுமா? நல்ல வாய்ப்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளைகளில் காலியாக உள்ள ரீசர்ஜ் சட்ட உதவியாளர் (Research Law Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் சென்னையில் உயர்நீதிமன்றம் அமைந்துள்ளது. இதன் கிளை உயர்நீதிமன்றம் மதுரையில் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் காலியாக உள்ள ரீசர்ஜ் சட்ட உதவியாளர் (Research Law Assistant) பணிக்கு 75 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் அரசு விதிகளின் படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வும் வழங்கப்பட உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் சட்டப்படிப்பை (10+2+3+3, 10+2+5, 10+2+4+3 உள்பட பிற அங்கீகரிக்கப்பட்ட பேட்டன்களும் அடங்கும்) முடித்திருக்க வேண்டும். அதோடு விண்ணப்பத்தாரர்கள் இந்த பணி அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஓராண்டு வரை பணியமர்த்தப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 8 ம் தேதிக்குள் https://www.hcmadras.tn.nic.in/ இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விரைவு தபாலில் டிசம்பர் 8 ம் தேதிக்குள் ‛‛The Registrar General, High Court, Madras-600 104'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இப்படி அனுப்பும்போது தபாலின் மேல்புறம் ‛‛Application for the post of Research Law Assistant to the Hon'ble judges'' எனகுறிப்பிட வேண்டும். அதோடு விண்ணப்ப படிவத்தின் Soft Copy-யை [email protected] எனும் இ-மெயிலுக்கு டிசம்பர் 8 ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் Vivo Voce முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் டவுன்லோட் செய்ய Click Here
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications