நோ எக்ஸாம் - நேர்க்காணல் மட்டுமே! மாதசம்பளம் ரூ.40,000.. சென்னை மாநகராட்சியில் சூப்பர் வேலைவாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சியில் 6 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8 ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் டிகிரி, பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் வரை இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் வேலையை பெற முடியும்.

சென்னை மாநகராட்சியின் கீழ் சென்னை நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:

 Chennai Coporation recruitment 2023 under chennai city urban health mission jobs

ஆக்சிலரி நர்ஸ் அன்ட் மிட்வைப்: இந்த பணிக்கு 122 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிப்ளமோ பிரிவில் ஏஎன்எம்/ஜிஎன்எம் படிப்பை முடித்திருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.14 ஆயிரம் வழங்கப்படும்.

மாவட்ட கன்சல்டன்ட்: மாவட்ட கன்சல்டன்ட் (குவாலிட்டி) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். டென்டல், ஆயுஷ், நர்சிங், சோசியல் சயின்ஸ், லைப் சயின்ஸ் டிகிரி முடித்து மாஸ்டர் டிகிரியில் அட்மினிஸ்ட்ரேஷன், பப்ளிக் ஹெல்த், ஹெல்த் மேனேஜ்மென்ட், Epidemiology படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

ப்ரோகிராம் கம் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டென்ட்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி படிப்பை முடித்து எம்ஆஸ் ஆபிசில் ஒரு ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைக்காலஜிஸ்ட்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதசம்பளமாக ரூ.23 ஆயிரம் வழங்கப்படும். இந்த பணிக்கு கிளினிக்கல் சைக்காலஜி அல்லது சைக்கலாஜி, அப்ளைட் சைக்கலாஜி, மெடிக்கல் மற்றும் சோியல் சைக்காலஜி டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சோசியல் வொர்க்கர்: இந்த பணிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.23,800 சம்பளமாக வழங்கப்படும். இந்த பணிக்கு பட்டமேற்படிப்பில் சோசியல் வொர்க் மற்றும் சைக்கார்டிக் சோசியல் வொர்க்கில் பிலாசபி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்ப்பம் செய்ய வேண்டும்.

ஹாஸ்பிட்டல் வொர்க்கர்: இந்த பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு மாதசம்பளமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல் செக்யூரிட்டி ஸ்டாப் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ரூ.6,300 மாதசம்பளமாக வழங்கப்படும். இந்த 2 பணிகளுக்கும் 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பிப்பது எப்படி: இந்த அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பம் செய்யும் விண்ணப்த்தாரர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 11 மாதம் வரை பணியமர்த்தப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.chennaicorporation.gov.in இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து வரும் 29 ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்ப முகவரி: விண்ணப்பங்களை The Member Secretary, Chennai City Urban Health Mission, Public Health Department, Ripon Building, Chennai - 600 003 என்ற முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்க்காணலில் சிறப்பாக செயல்படுபவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மேற்கூறிய விலாசம் அல்லது 044 - 2561 9330, 044 - 2561 9209 என்ற எண்களை வேலை நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+