சென்னையில் ரூ.33 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. செம சான்ஸ்! யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
சென்னை: சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பூங்கா பராமரிப்பாளர் பணியிடங்களானது நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.33 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் போன்ற விவரங்களை இங்கு காணலாம்.
சென்னை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் பூங்காக்கள் உள்ளன. மாநகராட்சிக்கு சொந்தமான இந்த பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை மாநகராட்சியே மேற்கொண்டு வருகிறது. இதற்காக தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பணியிடங்கள் விவரம்:
தற்போது காலியாக இருக்க கூடிய பராமரிப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
மொத்தம் 20 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பூங்காக்களில் பராமரிப்பாளராக நியமிக்கப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ (தோட்டக்கலை) அல்லது பி.எஸ்.சி (தோட்டக்கலை / வனவியல் / வேளாண்மை / தாவரவியல்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
சம்பளம் எவ்வளவு:
மாதம் ரூ. 33 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். எந்த வகையிலும் பணி நிரந்தரம் கோர முடியாது.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. மாநகராட்சி வெளியிட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் அளிக்க வேண்டும். தங்கள் சுயவிவரம் அடங்கிய பயோடேட்டா, கல்வி சான்று, அனுபவ சான்று ஆகியவற்றை இணைது நேரிலோ அல்லது தபாலிலோ 25.03.2026 க்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Superintending Engineer,
Park and Play field Department,
Greater Chennai Corporation,
Ripon Buildings,
Chennai - 600003.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 22.04.2026 ஆகும்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் சென்னை மாநகராட்சியில் உள்ள Park and Play field Department, Ripon Buildings, and Chennai - 600003 Phone: 044 - 25303620 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய https://chennaicorporation.gov.in/gcc/pdf/Application_Park%20overseer.pdf
-
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications