எழுத படிக்க தெரிந்தால் Ok.. டிகிரி இருந்தா டபுள் Ok! 10000 to 35000 சம்பளம்! அரசு வேலைக்கு ரெடியா?
சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரும்பும் பதவிகளுக்கு https:chennai.nic.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாமென சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கூறியுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையங்களில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகிநகர் மற்றும் செம்மஞ்சேரி பகுதிகளில் உள்ள மையங்களில் இந்த காலியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.

இந்த பணிகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையிலானவை என்பதுடன், உள்ளூர் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் www.chennai.nic.in இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காலியிடங்கள் மற்றும் தகுதிகள்:
1. மைய நிர்வாகி (Centre Administrator) - 5 இடங்கள்
சம்பளம்: ₹35,000
தகுதி: சமூகப் பணியில் (MSW) முதுகலை
அரசு அல்லது தன்னார்வ அமைப்புகளில் குறைந்தது 4 ஆண்டு அனுபவம்
உளவியல் ஆலோசனையில் 1 ஆண்டு அனுபவம்
பணியிடம்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகிநகர், செம்மஞ்சேரி
2. மூத்த ஆலோசகர் (Senior Counselor) - 5 இடங்கள்
சம்பளம்: ₹22,000
தகுதி: சமூக பணியில் முதுகலை + குறைந்தது 2 ஆண்டு அனுபவம்
பணியிடம்: குறிப்பிட்ட 5 மையங்கள்
3. தகவல் தொழில்நுட்ப பணியாளர் (IT Administrator) - 5 இடங்கள்
சம்பளம்: ₹20,000
தகுதி: இளங்கலை பட்டம் + 3 வருட IT அனுபவம்
4. வழக்கு பணியாளர் (Case Worker) - 30 இடங்கள்
சம்பளம்: ₹18,000
தகுதி: சமூகப் பணியில் இளங்கலை பட்டம் + 1 ஆண்டு அனுபவம்
5. பாதுகாப்பாளர் (Security Guard) - 10 இடங்கள்
சம்பளம்: ₹12,000
தகுதி: அரசு/பிரபல நிறுவனங்களில் பாதுகாப்புப் பணியில் அனுபவம்
6. பன்முக உதவியாளர் (Multipurpose Helper) - 10 இடங்கள்
சம்பளம்: ₹10,000
தகுதி: அலுவலக பணிகளில் அனுபவம், சமையல் மற்றும் பராமரிப்பு பணிகளில் அறிவு
பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
உள்ளூரைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
தேவைப்பட்டால் 24x7 சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டி இருக்கும்
தேர்வு முறை
தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு தேதி தபால் மூலம் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
www.chennai.nic.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் சேர்த்து அனுப்பவும்
அஞ்சல்/நேரில் சமர்ப்பிக்கும் முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
8வது தளம், சிங்காரவேலர் மாளிகை,
ராஜாஜி சாலை, சென்னை - 600001
விண்ணப்பங்கள் வழங்க கடைசி தேதி: 21.11.2025 என கூறப்பட்டுள்ளது.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு.. இந்த 3 வேலைகளை முடிக்க 1 நாள்தான் இருக்கு! தமிழக அரசு அதிரடி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications