சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை.. மாதம் 30 ஆயிரம் சம்பளம்.. டிகிரி தகுதி தான்.. உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் டெக்னிக்கல் (VC HOST) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றம் அல்லது மதுரை கிளையில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்ப படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..

பணியிடங்கள் விவரம்:
டெக்னிக்கல் (VC HOST) பணியிடங்கள் - 75
கல்வித்தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை பி.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்), பி.எஸ்.சி(ஐடி)/பிசிஏ/ பிஇ (கம்ப்யூட்டர் சயின்ஸ், சாப்ட்வேர் என்ஜினியரிங், ஏஐ, மற்றும் மெஷின் லேர்னிங்க்), பி.டெக்( ஐடி,)/ எம்.சி.ஏ, /எம்.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.இ(கம்ப்யூடர் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகள்), எம்.டெக் (ஐடி)/ எம்.எஸ் (ஐடி) ஆகிய ஏதேனும் ஒரு பாடபிரிவை எடுத்து படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இதர கிடிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
வயது வரம்பு& சம்பளம்:
டெக்னிக்கல் (VC HOST) - பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்களின் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். இந்த பணியானது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும். மாதம் ரூ. 30,000 - சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரரக்ள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். https://www.mhc.tn.gov.in/- என்ற இணையதளம் வாயிலாக விண்னப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 22.11.2024 ஆகும்.
விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 23.12.2024 ஆகும்.
தேர்வு நடைபெறும் இடம்: தேர்வு மையத்தை பொறுத்தவரை சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு வாரியம் தேர்வு மையங்களை உரிய நேரத்தில் அறிவிக்கும். தேர்வு மையங்களை மாற்ற வைக்கப்படும் கோரிக்கை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றம் அல்லது மதுரை கிளையில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
வீடியோ கான்பரன்சிங் வாயிலாக விசாரணை நடைபெறும் போதும் அதற்கு உதவி செய்வது, நெட்வொர்க் பிரச்சினை ஏற்பட்டால் சரி செய்வது உள்ளிட்ட பணிகள் இருக்கும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்த பிறகு அப்ளை பண்ணவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.mhc.tn.gov.in/vc_rec/docs/Notification%20-%20VC%20Host.pdf












Click it and Unblock the Notifications