‛‛தேர்வு கிடையாது’’.. மாதம் ரூ.30,000 டூரூ.42,000 வரை சம்பளம்.. சென்னை சிஐபிஏ-யில் அசத்தலான வேலை
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு கழகத்தில் தேர்வு இன்றி இன்டர்வியூ முறையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.42,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் கீழ் இந்திய வேளாண்மை கழகத்தின் சார்பில் சென்னையில் மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம் (Central Institute Of Brackishwater Aquaculture or CIBA) என்பது செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: சென்னை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு கழகத்தில் Young profession - I பணிக்கு 6 பேர், Young profession - II பணிக்கு ஒருவர் என மொத்தம் 7 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சம் என்றால் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின் படி வயது தளர்வு என்பது பின்பற்றப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: Young profession - I பணிக்கு டிகிரி முடித்து கம்ப்யூட்டர் அறிவு பெற்று தமிழ், இந்தி, ஆங்கிலம் தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்சி முடித்த MySQL & HTML CSS, PHP, Javascript தெரிந்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். Young profession - II பணிக்கு பிஏ படிப்பை ஹிந்தியில் முடித்து எம்எஸ் ஆபிஸ், ஹிந்தி டைப்பிங், ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கு மொழிமாற்றம் செய்ய தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மாத சம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்கள் குறைந்தது ஓராண்டு நியமனம் செய்யப்படுவார்கள். அதன்பிறகு 2 ஆண்டு வரை பணி நீட்டிப்பு செய்யப்படுவார்கள். பணி நீட்டிப்பு என்பது ஒவ்வொருவரின் செயல்பாட்டை பொறுத்து தான் அமையும். இது ஒரு தற்காலிக பணி என்றாலும் Young profession - I பணிக்கு தேர்வாகும் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். Young profession - II பணிக்கு மாதம் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 6ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதாவது https://ciba.icar.gov.in/ இணையதளம் சென்று பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து மார்ச் 6ம் தேதிக்குள் [email protected] எனும் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பம் செய்வோர் பங்கேற்கும் நேர்க்காணல் குறித்த விபரம் இ-மெயில் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தப்படும். நேர்க்காணல் என்பது ICARCIBA, MRC Nagar, Chennai 28 என்ற முகவரியில் நடைபெறும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here












Click it and Unblock the Notifications