மிஸ் பண்ணாதீங்க.. கைநிறைய சம்பளம்.. சென்னை என்ஐஆர்டி-யில் அசத்தலான வேலை.. செம வாய்ப்பு
சென்னை: சென்னையில் ஐசிஎம்ஆர் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் என்ஐஆர்டி-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு கைநிறைய சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஐசிஎம்ஆர் எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council Of Medical Research or ICMR) செயல்பட்டு வருகிறது.

இந்த கவுன்சிலின் கீழ் என்ஐஆர்டி எனும் சென்னையில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute for Research in Tuberculsis) இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: சென்னை ஐசிஎம்ஆர் என்ஐஆர்டி-யில் ப்ராஜெக்ட் டெக்னீக்கல் சப்போர்ட் I (ஹெல்த் அசிஸ்டென்ட்) பணிக்கு 9 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதாவது பொதுப்பிரிவை சேர்ந்த 4 பேர், ஓபிசி பிரிவை சேர்ந்த பேர், எஸ்சி பிரிவை சேர்ந்த ஒருவர், இடபிள்யூஎஸ் பிரிவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 9 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி -மாதசம்பளம்: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அதோடு டிப்ளேமா பிரிவில் (எம்எல்டி/டிஎம்எல்டி/ஐடிஐ) படிப்புகளை முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ப்ராஜெக்ட் டெக்னீக்கல் சப்போர்ட் I (ஹெல்த் அசிஸ்டென்ட்) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். அதோடு எச்ஆர்ஏ வழங்கப்படும். மேலும் பீல்ட் வொர்க் செல்ல நேர்ந்தால் தினசரி பயணப்படியும் வழங்கப்படும்.
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர், துறை சார்ந்த விண்ணப்பத்தாரர்கள், முன்னாள் படை வீரர்களுக்கு தளர்வுகள் உண்டு. பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: இது ஒரு தற்காலிக பணியாகும். தற்போத தேர்வாகும் நபர்கள் 4 மாதம் வரை பணியமர்த்தப்பவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.nirt.res.in அல்லது www.icmr.nic.in ஆகிய இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து டிசம்பர் 7 ம் தேதி தேதி எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் நடைபெறும் இடத்துக்கு கையோடு எடுத்து செல்ல வேண்டும்.
இந்த சமயத்தில் கல்வி சான்று, வயது, சாதி சான்று, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் வைத்து கொண்டு ICMR-National institute For Researh In Tuberculosis, No.1.Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai 600 031 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்?












Click it and Unblock the Notifications