லைசென்ஸ் இருக்கா? சென்னை என்ஐஆர்டி-யில் டிரைவர் வேலை.. மே 9ம் தேதி இன்டர்வியூ இருக்கு!
சென்னை: ஐசிஎம்ஆர் கட்டுப்பாட்டில் சென்னையில் இயங்கி வரும் என்ஐஆர்டி-யில் காலியாக உள்ள டிரைவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஐசிஎம்ஆர் எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council Of Medical Research or ICMR) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்த கவுன்சிலின் கீழ் என்ஐஆர்டி எனும் சென்னையில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute for Research in Tuberculsis) இயங்கி வருகிறது. இங்கு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
அதாவது சென்னை ஐசிஎம்ஆர் என்ஐஆர்டி-யில் டிரைவர் பணிக்கு 15 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு படித்து சரக்கு மற்றும் பயணிகள் வாகனத்தை இயக்கும் லைட் லைசென்ஸ் வைத்து 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.16 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இது ஒரு தற்காலிக பணியாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSei3nIwy2DPefXDW5E5BTB7aIGe8vhNUd_RSOUtbaVz5s2ITA/viewform
என்பதை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய மே மாதம் 6ம் தேதி மாலை 6 மணி கடைசி நாளாகும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் நேரடியாக மே மாதம் 9ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கும் இன்டர்வியூவில் பங்கேற்கலாம். இன்டர்வியூவில் பங்கேற்கும் நபர்கள் www.nirt.res.in, www.icmr.nic.in இணையதளம் மூலம் விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்வி சான்றிதழ், வயது, சாதி சான்றிதழ், ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல வேண்டும்.
இன்டர்வியூ என்பது ICMR - National institute for Research in Tuberculosis, No.1, Mayor sathyamoorthy Road, Chetpet, Chennai - 600031 என்ற முகவரியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் ஆன்லைனில் இன்டர்வியூ நடத்தப்படும். இன்டர்வியூ என்பது நேரடியாகவா அல்லது ஆன்லைனிலா என்பது தொடர்பான இறுதி அறிவிப்பு விண்ணப்பம் செய்த பிறகு அறிவிக்கப்படும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here












Click it and Unblock the Notifications