ஜாக்பாட்.. கைநிறைய சம்பளத்தில் சென்னை ஐஐடியில் சூப்பர் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஐஐடியில் காலியாக உள்ள டெக்னிக்கல் ஆபிசர் மற்றும் ஜுனியர் டெக்னிக்கல் சூப்பிரண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியாவில் முன்னணி கல்வி நிறுவனங்களாக ஐஐடி செயல்பட்டு வருகின்றன. பல நகரங்களில் ஐஐடி இயங்கி வருகிறது. சென்னையிலும் ஐஐடி செயல்பட்டு வருகிறது.

Chennai IIT Recruitment 2024 for Technical Officer and Junior Technical Superintendent


இந்நிலையில் தான் சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள்: சென்னை ஐஐடியில் டெக்னிக்கல் ஆபபிசர் பணிக்கு 8 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். துறை வாரியாக பார்த்தால் கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐடி பிரிவுக்கு 2 பேர், இசிஇ, ட்ரிபிள்இ பிரிவுக்கு தலா ஒருவர், மெக்கானிக்கல் பிரிவுக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஜுனியர் டெக்னிக்கல் சூப்பிரண்ட் பணிக்கு 12 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். துறை வாரியாக பார்த்தால் பயோலாஜி, லைஃப் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐடி, இசிஇ, இஇ(EE), மெக்கானிக்கல் பிரிவுகளுக்கு தலா ஒருவர், கெமிஸ்ட்ரிக்கு 2 பேர், இ&ஐ-க்கு (E&I) 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ரூ.40,000 முதல் ரூ.1.40 லட்சம் வரை மாத சம்பளம்! இசிஐஎல் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. மிஸ் பண்ணாதீங்க


வயது வரம்பு: டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 45 வயதுக்குள்ளும், ஜுனியர் டெக்னிக்கல் சூப்பிரண்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயதுக்குள், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், பிடபிள்யூபிடி பிரிவினர் என்றால் 10 முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது என்பது 24.04.2024ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

கல்வி தகுதி: டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் எம்இ, எம்டெக் படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிஇ, பிடெக், எம்எஸ்சி, எம்சிஏவில் சம்பந்தப்பட்ட துறையில் படிப்பை முடித்து 8 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஜுனியர் டெக்னிக்கல் சூப்பிரண்ட் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பிஇ, பிடெக், எம்எஸ்சி, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு லெவல் - 10 என்ற அடிப்படையிலும், ஜுனியர் டெக்னிக்கல் சூப்பிரண்ட் பணிக்கு லெவல் - 6 என்ற அடிப்படையிலும் மாதசம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் மாதம் 24ம் தேதி மாலை 5.30 மணிக்குள் https://recruit.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இப்படி விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி/ட்ரேட் தேர்வு, நேர்க்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+