ரூ.40,000 முதல் ரூ.1.40 லட்சம் வரை மாத சம்பளம்! இசிஐஎல் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: இசிஐஎல் நிறுவனத்தில் மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இசிஐஎல் எனும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம். இந்த நிறுவனம் மத்திய அரசின் அணு ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: இசிஐஎல் நிறுவனத்தில் கிராசுவேட் என்ஜினீயர் டிரெய்னி (Graduate Engineer Trainee) பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. மொத்தம் 30 பேர் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர். துறை வாரியாக பார்த்தால் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பிரிவுக்கு 5 பேர், எலக்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பிரிவுக்கு 7 பேர், மெக்கானிக்கல் பிரிவுக்கு 13 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு 5 பேர் என மொத்தம் 30 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இன்டர்வியூ மட்டும் தான்.. ரூ.31,000 வரை சம்பளம்.. சென்னை சிஎஸ்ஐஆர் - சிஇசிஆர்ஐ-யில் அசத்தலான வேலை
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 12.04.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் அரசு விதிகளின்படி வயது தளர்வு என்பது வழங்கப்பட உள்ளது. அதன்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்பட உள்ளது.
1,377 பணியிடம்.. நவோதயா பள்ளியில் வேலை! 10ம் வகுப்பு டூ டிகிரி முடித்தவர்களே ரெடியா? அசத்தல் ஊதியம்
கல்வி தகுதி - மாத சம்பளம்: இந்த பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.ecil.co.in இணையதளம் மூலம் ஏப்ரல் 13ம் தேதி மதியம் 2 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய Click Here












Click it and Unblock the Notifications