இன்டர்வியூ மட்டும் தான்.. ரூ.31,000 வரை சம்பளம்.. சென்னை சிஎஸ்ஐஆர் - சிஇசிஆர்ஐ-யில் அசத்தலான வேலை
சென்னை: சிஎஸ்ஐஆர் - சிஇசிஆர்ஐ சென்னை யூனிட்டில் காலியாக ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. மாதம் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.31 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 5ம் தேதி நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி ஆய்வு நிறுவனத்தின் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR -CECRI or CSIR - Central Electrochemical Research Institute) அமைந்துள்ளது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது சிஎஸ்ஐஆர் - சிஇசிஆர்ஐ சென்னை யூனிட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: சிஎஸ்ஐஆர் - சிஇசிஆர்ஐ சென்னை யூனிட்டில் ப்ராஜெக்ட் அசோசியேட் - I பணிக்கு மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு எம்எஸ்சி கெமிஸ்ட்ரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வயது வரம்பு: விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பிடபிள்யூடி பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு. நேர்க்காணலில் பொதுப்பிரிவினரும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரும் சமமான மதிப்பெண் பெறும் பட்சத்தில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மாத சம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.31 ஆயிரம் + எச்ஆர்ஏ வழங்கப்படும். இதில் ரூ.31 ஆயிரம் என்பது நெட், கேட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு வழங்கப்படும். மற்றவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
நேர்க்காணல் எங்கு: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.cecri.res.in இணையதளத்தில் விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு படிப்பு, அனுபவ சான்றிதழ்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம். நேர்க்காணல் என்பது ஏப்ரல் 5ம் தேதி காலை 9 மணிக்கு CERI Chennai Unit, CSIR Madras Complex, Taramani, Chennai என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
நேர்க்காணலில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு பிறகு வருவோருக்கு அனுமதி கிடைக்காது. இதனால் முடிந்தவரை காலை 9 மணிக்கு முன்பாகவே செல்ல வேண்டும். மேலும் சந்தேகங்கள் இருப்பின் 04565 - 241219/218 எனும் தொலைபேசி எண் அல்லது [email protected] எனும் மெயில் மூலம் தீர்த்து கொள்ளலாம்.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் கூடுதல் விபரங்கள் அறிய Click Here
பணிக்கான விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here












Click it and Unblock the Notifications