சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை பார்க்க ஆசையா? வந்தது சூப்பர் சான்ஸ்! தட்டி தூக்குங்க
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் (Job in Chennai Metro Rail Corporation) டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன் துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? சம்பளம் எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சி.எம்.ஆர்.எல் எனப்படும் மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் இயக்கம் மற்றும் மெட்ரோ ரயில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறது. 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம் சென்னை கோயம்பேட்டில் உள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்த கூட்டு நிறுவனமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் அவ்வப்போது ஒப்பந்த அடிப்படையிலும் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அந்த வகையில் தற்போது டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. டெக்னீஷியன் - RS
2. டெக்னீஷியன் - E&M
3. டெக்னீஷியன் - டிராக்ஷன்
4. டெக்னீஷியன் - டெலி & AFC
5. டெக்னீஷியன் - சிவில் & டிராக்
பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்ற விவரம் வெளியாகவில்லை.
கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன் துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரிஷியன், எலக்ட்ரானிக், மெக்கானிக், ஃபிட்டர், ரெஃப்ரிஜிரேஷன் மற்றும் ஏசி மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டெக்னீஷியன் சிவில் டிராக் பணிக்கு வெல்டர், கார்பெண்டர் உள்ளிட்ட பிரிவுகளில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு:
18 வயது முடிந்தவர்களும் 33 வயதுக்கு உட்பட்டவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாடு அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். இது குறித்த விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளவும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 26,330 வழங்கப்படும். மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு முறை:
சான்றிதழ் சரிபார்ப்பு, தமிழ் மொழித்திறன் தேர்வு, உள்ளிட்டவை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். https://backend.delhimetrorail.com/. என்ற இணையளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும்முன்பாக தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். https://backend.delhimetrorail.com/admin/login/?next=/admin/












Click it and Unblock the Notifications