சென்னையில் வேலை.. மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம்.. பிளஸ் 2 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: சென்னை மாநகர சமூக பாதுகாப்பு பிரிவில் புரோகிராம் ஆஃபிசர், உதவியாளர் கம் டேடா எண்ட்ரி ஆபரேட்டேர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு துறையின் கீழ் சென்னை மாநகர சமூக பாதுகாப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. புரோகிராம் ஆஃபிசர், உதவியாளர் கம் டேடா எண்ட்ரி ஆபரேட்டேர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

கல்வி தகுதி: புரோகிராம் ஆபிசர் (PO) பணியிடத்திற்கு சமூக பணி/ Sociology/ குழந்தைகள் மேம்பாடு/ மனித உரிமை பொது நிர்வாகம்/ உளவியல்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் முதுகலை அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிற துறைகளில் பட்டம் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.
Assistant cum Data Entry Operator- பணியிடத்திற்கு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணிணி அறிவு பெற்றிருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சரா தொண்டு நிறுவனத்தில் ஒரு ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் இருப்பது அவசியம்.
வயது வரம்பு: புரோகிராம் ஆஃபிசர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 42-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். DEO- பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். புரோகிராம் ஆபிசர்-1,Assistant cum Data Entry Operator-1, என மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
சம்பளம் எவ்வளவு?: புரோகிராம் ஆபிசர் பணியிடத்திற்கு மாதம் ரூ.34,755/- (ஒருங்கிணைந்த ஊதியம்) வழங்கப்படும். உதவியாளர் மற்றும் டேடா எண்ட்ரி ஆபரேட்டர் பணியிடத்திற்கு ரூ.13,240 சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://urxl.com/SCPS2023 என்ற இணையதளத்திற்கு அங்கு கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும். அதன்பிறகு இந்த படிவத்தை நிரப்பி Department of Social Defence, No.300, Purasawalkam High Road, Kellys, Chennai - 600010. Website: dsdcpimms.tn.gov.in - என்ற முகவரிக்கு வரும் 20.08.2023- ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். அதன்பிறகு கிடைக்கும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது.
தேர்வு பற்றிய மேலும் விவரங்களுக்கு https://cms.tn.gov.in/sites/default/files/announcement/2023_TNSCPS_vacant_recruitment.pdf என்ற இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications