மாதம் ரூ.20,000 டூ ரூ.67,000 சம்பளம்.. சென்னையிலேயே பணி.. அழைக்கும் என்ஐஓடி.. அனைவருக்கும் வாய்ப்பு!
சென்னை பள்ளிக்கரணையில் மத்திய அரசின் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்னையில் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் டிகிரி, என்ஜினீயரிங் படித்தவர்கள் வரை விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.67 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ளது.
இந்த நிறுவனம் மத்திய பூவி அறிவியல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் என்ன?
சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மொத்தம் 89 பணியிடங்கள் காலியாக உள்ளன. ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் II பணிக்கு 4 பேர், ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் I பணிக்கு 25 பேர், ப்ராஜெக்ட் சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிக்கு 30 பேர், ப்ராஜெக்ட் டெக்னீசியன் பணிக்கு 16 பேர், ப்ராஜெக்ட் ஜூனியர் அசிஸ்டென்ட்பணிக்கு 14 பேர் என மொத்தம் 89 பேர் தேர்வு செய்யப்படன உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் II, ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் I, ப்ராஜெக்ட் சயின்டிபிக் அசிஸ்டென்ட், ப்ராஜெக்ட் டெக்னீசியன், ப்ராஜெக்ட் ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு என தனித்தனியாக கல்வி தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், எம்இ பிரிவில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், மரைன் என்ஜினீயரிங், ஓசன் என்ஜீனியரிங், சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்எஸ்சி அல்லது பிஎச்டியை மரைன் பயாலஜி, மரைன் சயின்ஸ்ட், ஜூவாலஜி, பாட்டனி, பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ், பிசிஏ, பிஎஸ்சி டிப்ளமோ எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிப்புகள் இல்லாவிட்டால் டிகிரி, 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

வயது வரம்பு என்ன?
ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் II பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் I பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள்ளும், பிற பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்படும்.

மாதசம்பளம் என்ன?
ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் II பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.67 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் I பணிக்கு மாதம் ரூ.56 ஆயிரம், ப்ராஜெக்ட் சயின்டிபிக் அசிஸ்டென்ட், ப்ராஜெக்ட் டெக்னீசியன், ப்ராஜெக்ட் ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். இதுதவிர எச்ஆர்ஏ கிடைக்கும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி 28 ம் தேதிக்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் www.niot.res.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணிக்கான நேர்க்காணல் தனித்தனியாக நடைபெற உள்ளது. மார்ச் 9, 10, 13, 14, 14 16, 17 ஆகிய தேதிகளில் நேர்க்காணல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பிரிவு பணிகளுக்கு நேர்க்காணல் நடைபெற உள்ளது. எந்தெந்த தேதிகளில் எந்த நேர்க்காணல் என்பது பற்றிய விபரம் கீழே உள்ள அதிகாரப்பூ்வ அறிவிப்பின் பக்கம் 12ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications