மாதம் ரூ.1.42 லட்சம் வரை சம்பளம்! என்ஐஓடியில் அசத்தலான வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே பணி
சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்னையில் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.1.42 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
சென்னை தாம்பரம் ரோட்டில் வேளச்சேரியில் மத்திய அரசின் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மத்திய பூவி அறிவியல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் என்பது
இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:
காலியிடங்கள்: சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் டெக்னீசியன் கிரேட் ஏ பணிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். சயின்டிபிக் அசிஸ்டென்ட் கிரேட் ஏ பணிக்கு 5 பேர், சயின்டிபிக் அசிஸ்டென்ட் கிரேட் பி/டெக்னீக்கல் ஆபிசர் பணிக் 3 பேர் என மொத்தம் 13 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: டெக்னீசியன் கிரேட் ஏ பணிக்கு ஐடிஐ-யில் எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், வெல்டர், மெக்கானிக்கல் படிப்பை முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். சயின்டிபிக் அசிஸ்டென்ட் கிரேட் ஏ பணிக்கு டிப்ளமோ மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், பிஎஸ்சி விலங்கியல், எம்எஸ்சி விலங்கியல் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
மேலும் சயின்டிபிக் அசிஸ்டென்ட் கிரேட் பி/டெக்னீக்கல் ஆபிசர் பணிக்க டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: டெக்னீசியன் கிரேடு ஏ பணிக்கு 25 வயதுக்குள்ளும், சயின்டிபிக் அசிஸ்டென்ட் கிரேடு ஏ பணிக்கு 28 வயதுக்குள்ளும், சயின்டிபிக் அசிஸ்டென்ட் கிரேடு பி/டெக்னீக்கல் ஆபிசர் பணிக்கு 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு என்பது வழங்கப்படும். வயது வரம்பு என்பது 11.03.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
மாத சம்பளம்: டெக்னீசியன் கிரேடு ஏ பணிக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும். சயின்டிபிக் அசிஸ்டென்ட் கிரேடு ஏ பணிக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை ஊதியம் வழங்கப்படும்.சயின்டிபிக் அசிஸ்டென்ட் கிரேடு பி/டெக்னீக்கல் ஆபிசர் பணிக்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 400 வரை சம்பவளம் கொடுக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மார்ச் மாதம் 11ம் தேதிக்குள் https://www.niot.res.in/ எனும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் டிரேட் தேர்வு/த்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications