சென்னையில் மத்திய அரசு பணி.. மாத சம்பளம் ரூ.50,000 முதல் ரூ.1.80 லட்சம்.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.80 லட்சம் வரையிலான மாத சம்பளத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் உள்ளது.
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை என அழைக்கப்படும் இந்த நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மொத்தம் 22 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கெமிக்கல் மற்றும் மெக்கானிக் என்ஜினியரிங் பிரிவில் தலா 4 பணியிடம், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமென்டல் என்ஜினியரிங் பிரிவில் தலா 2 பணியிடம், Metallurgy என்ஜினியரிங் பிரிவில் ஒன்று, மார்க்கெட்டிங் அதிகாரிக்கு 2 பணியிடம், எச்ஆர் அதிகாரிக்கு 3 பணியிடம், ஐடிஎஸ் மற்றும் சட்ட அதிகாரி பணிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 22 பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி என்ன?
இந்த பணிகளுக்கு என்ஜினியரிங் பிரிவில் கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல், மெக்கானிக், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், சிவில், இன்ஸ்ட்ருமென்டல், Metallurgy மற்றும் மார்க்கெட்டிங் அதிகாரிபணி ஆகியவற்றுக்கு என்ஜினியரிங் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். எச்ஆர் அதிகாரி பணிக்கு எம்பிஏ முடித்திருக்க வேண்டும். ஐடிஎஸ் பணிக்கு கம்ப்யூட்டர், ஐடி, ,எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் என்ஜினியரிங் படிப்பையும், சட்ட அதிகாரி பணிக்கு சட்டப்படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு - ஊதியம் என்ன?
விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது, ஓபிசி பிரிவினருக்கு 3 வயது, மாற்றுத்திளனாளிகளுக்கு 10 வயது வரை தளர்வு உண்டு. வயதானது 01.07.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.1.80 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும். இதுதவிர, டிஏ, எச்ஆர்ஏ, போக்குவரத்து செலவு உள்ளிட்ட பல சலுகைகள் உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 24.08.2022ம் தேதி முதல் 21.09.2022ம் தேதிக்குள் ஆன்லைனில் www.cpcl.co.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் விண்ணப்த்தாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஹால்டிக்கெட் அக்டோபர் மாதம் 04ம் தேதி வெளியிடப்பட்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்.
இந்த வேலை அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications