மாத சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.44 ஆயிரம் வரை.. சென்னையிலேயே சூப்பர் வேலை.. அழைக்கும் சிபிசிஎல்!
சென்னை: சிபிசிஎல் நிறுவனத்தில் மாதம் குறைந்தபட்சமாக ரூ.24 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.44 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் சென்னையில் 73 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் சிபிசிஎல் எனும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL or Chennai Petroleum Corporation Limited) செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (ப்ரோடக்சன்) டிரெய்னி பணிக்கு 9 பேர், ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (ப்ரோடக்சன்) பணிக்கு 23 பேர், ஜுனியர் குவாலிட்டி கண்ட்ரோல் அனலிஸ்ட் IV (QC) டிரெய்னி பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (மெக்கானிக்கல்) டிரெய்னி பணிக்கு 5 பேர், ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (மெக்கானிக்கல்) பணிக்கு 7 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (எலக்ட்ரிக்கல்) டிரெய்னி பணிக்கு 5 பேர், ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (எலக்ட்ரிக்கல்) பணிக்க 5 பேர், ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (இன்ஸ்ட்ரூமென்டேசன்) டிரெய்னி பணிக்கு 3 பேர், ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (இன்ஸ்ட்ரூமென்டேசன்) பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (P & U - மெக்கானிக்கல்) பணிக்கு 2 பேர், ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (P & U Electrical) பணிக்கு 2 பேர், ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (Fire And Safety) டிரெய்னி பணிக்கு 2 பேர், ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (Fire And Safety) பணிக்கு 5 பேர் என மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.02.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் படை வீரர்களுக்கு 5 வயது வரை தளர்வு என்பது வழங்கப்படும். ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், பிடபிள்யூபிடி பிரிவினர் என்றால் 10 வயது வரையும் வயது தளர்வு என்பது வழங்கப்படும்.
கல்வி தகுதி: ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (ப்ரோடக்சன்) டிரெய்னி, ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (ப்ரோடக்சன்) பணிகளுக்கு டிப்ளமோ கெமிக்கல், பெட்ரோலியம், பெட்ரோ கெமிக்கல் என்ஜினீயரிங், பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படித்திருக்க வேண்டும். மேலும் சம்பந்த்தப்பட்ட துறையில் ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஜுனியர் குவாலிட்டி கண்ட்ரோல் அனலிஸ்ட் IV (QC) டிரெய்னி பணிக்கு பிஎஸ்சி கெமிஸ்ட்ரி, ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (மெக்கானிக்கல்) டிரெய்னி, ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (மெக்கானிக்கல்), ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (P & U - மெக்கானிக்கல்) பணிகளுக்கு டிப்ளமோ மெக்கானிக்கல் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (எலக்ட்ரிக்கல்) டிரெய்னி, ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (எலக்ட்ரிக்கல்), ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (P & U Electrical) பணிகளுக்கு டிப்ளமோ எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும். ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (இன்ஸ்ட்ரூமென்டேசன்) டிரெய்னி, ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (இன்ஸ்ட்ரூமென்டேசன்) பணிகளுககு டிப்ளமோ இன்ஸ்ட்ரூமென்டேசன், இன்ஸ்ட்ரூமென்டேசன் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிசேன் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (Fire And Safety) டிரெய்னி பணிக்கு 2 பேர், ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV (Fire And Safety) பணிகளுக்கு 10ம் வகுப்பு முடித்து நாக்பூர் என்எப்எஸ்சி-யில் Sub Officers Course முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: அனைத்து பிரிவு ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV டிரெய்னி மற்றும் ஜுனியர் குவாலிட்டி கண்ட்ரோல் அனலிஸ்ட் IV (QC) டிரெய்னி பணிகளுக்கு மாதம் ரூ.44 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் IV அனைத்து பிரிவு பணிகளுக்கும் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.cpcl.co.in இணையதளம் மூலம் பிப்ரவரி 26ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடிபிள்யூடி, மாஜி படை வீரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் தேர்வு, திறனறி/proficiency/உடல்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் பணியமர்த்தப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications