டிகிரி - இன்ஜினியரிங் படித்தவரா நீங்கள்? பிரபல ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வேலை.. ரெடியா?
சென்னை: சிஸ்கோ (Cisco) ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்ஜினியரிங் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தற்போது பலருக்கும் ஐடி நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்பது கனவாக உள்ளது. இதனால் டிகிரி, இன்ஜினியரிங் படிப்பை முடித்த பிறகும் கூட பலரும் ஐடி துறையில் கால்பதிக்க தனியே சில படிப்புகளை தேர்வு செய்து படித்து வருகின்றனர்.

இதற்கிடையே தான் தற்போது அடுத்தடுத்து ஐடி நிறுவனங்களில் இருந்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சிஸ்கோ (Cisco) ஐடி நிறுவனத்தில் இருந்து வெளியாகி உள்ள அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
சிஸ்கோ ஐடி நிறுவனத்தில் தற்போது ஃபுல் ஸ்டாக் சாப்ட்வேர் இன்ஜினியர் - ரியாக்ட் & ஜாவா (என்ட்ரி லெவல்) [Full Stack Software Engineer - React & Java(Entry level)] பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளநிலை பிரிவில் இன்ஜினியரிங் அல்லது முதுநிலை பிரிவில் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு பணியில் 2 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். அதாவது ஸ்டடீஸ், புராஜெக்ட், இன்டர்ன்ஷிப், அப்ரன்டீஷிப் முறையில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு ஜாவா ஸ்கிரிப்ட், ரியாக்ட் ஜேஎஸ், Redux, TypeScript உள்ளிட்டவற்றில் அனுபவம் இருப்பின் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அதேபோல் ஜாவா, ரெஸ்ட்ஏபிஐஸஅ, வெப் அப்ளிகேஷனில் டிசைன் மற்றும் இம்பிமென்டேஷனில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். SQL Database பற்றி அறிந்திருக்க வேண்டும். அதேபோல் லார்ஜ் ஸ்கேல் கிளைவுட் அப்ளிகேஷன் (AWS) மற்றும் பிற AWS சர்வீசஸில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Maven, Gradle, Jenkins, Git உள்ளிட்டவற்றை தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாம் மினிமம் தகுதி (Minimum Qualification) ஆ தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் Preferred Qualifications என்றால் Kotlin,Vetrx, Websockets, Kafka, GraphQL உள்ளிட்டவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்த பணிக்கான மாத சம்பளம் குறித்த விவரம் எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications