மாத சம்பளம் ரூ.92,000.. சிஐஎஸ்எப்பில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. பிளஸ் 2 முடித்தாலே போதுமாம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிஐஎஸ்எப் படையில் ரூ.92 ஆயிரம் மாத சம்பளத்தில் பணிபுரிய விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் சிஐஎஸ்எப் எனும் மத்திய தொழில்பாதுகாப்பு படை உள்ளது. இங்கு பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான முறையான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சேர்ந்து சேவையாற்றலாம்.

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் மொத்தம் 2 பிரிவுகளில் 540 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோகிராபர்) பணிக்கு 122 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தலைமை காவலாளர் (மினிஸ்டெரியல்) பணிக்கு 418 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் விண்ணப்பம் செய்ய முடியும்.

 கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

இதில் உதவி ஆய்வாளர் (ஸ்டெனோகிராபர்) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி நிமிடத்துக்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் கொண்டிருக்க வேண்டும். தலைமை காவலர் (மினிஸ்டெரியல்) பணிக்கு கணினியில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்

வயது-மாத சம்பளம் எவ்வளவு?

வயது-மாத சம்பளம் எவ்வளவு?

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பானது 25.10.2022 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். தலைமை காவலர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை கிடைக்கம். உதவி சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.29200 முதல் ரூ.92,300 வரை கிடைக்கும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் திறனறி தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் https://www.cisf.gov.in/cisfeng/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய 25.10.2022 கடைசிநாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு கட்டணம் கிடையாது.

வேலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+