‛அனுபவம் வேண்டாம்’ .. கோவையில் காத்திருக்கும் ஐடி வேலை.. டிகிரி முடித்தோருக்கு சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

கோவையில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் ClonifyPro நிறுவனம். இந்த நிறுவனம் கோவை கணபதி ஸ்ரீவாரி ராமகிருஷ்ணா கார்டன் சிவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது.

it jobs jobs job

இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழுமையான விபரம் வருமாறு:

ClonifyPro ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது QA Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்பட அது சார்ந்த பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதோடு சாப்ட்வேர் டெஸ்ட்டிங் (Manual or Automation) பிரிவில் 0-2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

சாப்ட்வேர் டெஸ்ட்டிங் லைஃப்சர்க்கிள் (STLC)மற்றும் லைஃப் சைக்கிள் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அதேபோல் டெஸ்ட் மேனேஜ்மென்ட் மற்றும் பக் டிராக்கிங் டூல்ஸ்களான JIRA, TestRail அல்லது Bugzilla ஆகியவை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங் டூல்ஸ்களான Selenium, Appium அல்லது Cypress தெரிந்திருந்தால் பிளஸ் பாயிண்ட்டாகும்.

மேலும் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் மற்றும் பிரச்சனையை தீர்க்கும் திறன், நல்ல கம்யூனிகேஷன் திறமை ஆகியவை இருக்க வேண்டும். Preferred Skils ஆக Postman அல்லது RestAssures ஆகியவற்றை பயன்படுத்தி ஏபிஐ டெஸ்ட்டிங்கில் அனுபவம் இருக்க வேண்டும். CI/CD பைப்லைன்ஸ் மற்றும் Git பற்றிய அறிவு கொண்டிருக்க வேண்டும். பெர்பாமன்ஸஅ டெஸ்ட்டிங் டூல்ஸ் JMeter அல்லது LoadRunner தெரிந்திருக்க வேண்டும். Agile methodologies மற்றும் Scrum Processes தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான மாதசம்பளம் பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் விண்ணப்பத்துக்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+