நோ எக்ஸாம்.. சென்னை குடிநீர் வினியோகம்-வடிகால் வாரியத்தில் சூப்பர் வேலை.. யாருக்கெல்லாம் வாய்ப்பு?
சென்னை: சென்னை மெட்ரோபாலிட்டன் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனால் விண்ணப்பம் செய்வோர் எளிதாக இந்த பணியை பெற முடியும்.
சென்னையில் குடிநீர் வழங்கும் பணியை சென்னை மெட்ரோ பாலிட்டன் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மெட்ரோபாலிட்டன் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்தில்(CMWSSB) காலியாக உள்ள 100க்கும் அதிகமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்கள் 2 வகைகளில் நிரப்பப்பட உள்ளது.

காலியிடங்கள் என்னென்ன?
அதன்படி Graduate Apprentices பிரிவில் சிவில் என்ஜினீயரிங்/மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பணிக்கு 52 பேர், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பணிக்கு 24 பேர் என மொத்தம் 76 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு மாத உதவித்தொகையாக ரூ.9 ஆயிரம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறிப்பிட்ட பிரிவில் பிஇ படிப்பை முடித்திருக்க வேண்டும். அதன்பிறகு Diplomo Apprentices பணி பிரிவில் சிவில் என்ஜினீயரிங் பிரிவில் 10 பேர், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பிரிவில் 22 பேர் என மொத்தம் 32 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாதசம்பளம் என்ன?
இது Apprentice வகை பணி என்பதால் மாதசம்பளம் கிடையாது. மாறாக பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த பணிக்கு 2020, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இது ஒரு தற்காலிக பணியாகும். பணிகளுக்கு தேர்வாகும் நபர்கள் ஓராண்டு மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். வயது வரம்பை பொறுத்தமட்டில் Apprenticeship விதிகள் பின்பற்றப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குள் https://www.boat-srp.com போர்ட்டலில் பதிவு செய்வதோடு, சென்னை மெட்ரோ குடிநீர் வினியோகம் மற்றுமு் வடிவால் வாரிய பணிக்கு ஏப்ரல் 30ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வு கிடையாது
இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டோரின் பட்டியல் http://www.boat-srp.com இணையதளத்தில் மே மாதம் 8ம் தேதி வெளியிடப்படும். அதன்பிறகு மே மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுவார்கள். இவ்வாறு எழுத்து தேர்வு இன்றி பணிக்கு தேர்வு செய்யப்ட உள்ளனர்.
பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications