மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 77 ஆயிரம் சம்பளம்.. டிகிரி, டிப்ளமோ முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் டெக்னிக்கல் ஸ்டோர் கீப்பர், அசிஸ்டென்ட் என மொத்தம் 132 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.77 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (Cochin Shipyard Limited) என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் முன்னணி கப்பல் கட்டும் மற்றும் பழுது பார்க்கும் நிறுவனம் ஆகும். கடந்த1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனமானது, கேரளாவின் கொச்சினில் அமைந்துள்ளது. இந்திய கடற்படை மற்றும் வணிகக் கப்பல்களுக்கு சேவைகள் வழங்கி வருகிறது.

பணியிடங்கள் விவரம்:
தற்போது இந்த நிறுவனத்தில் 132 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? எப்படி விண்ணப்பிப்பது? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
* சீனியர் ஷிப் டிராஃப்ட்ஸ்மேன் பிரிவில் மெக்கானிக்கல் (20 பணியிடங்கள்), எலெக்ட்ரிக்கல் (7), எலெக்ட்ரானிக்ஸ் (1), இன்ஸ்ட்ரூமென்டேஷன் (2) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
* ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவில் மெக்கானிக்கல் (36), எலெக்ட்ரிக்கல் (11), எலெக்ட்ரானிக்ஸ் (3), சிவில் (1), இன்ஸ்ட்ரூமென்டேஷன் (2).
* லேபரட்டரி அசிஸ்டென்ட் பிரிவில் மெக்கானிக்கல் (4) மற்றும் கெமிக்கல் (2) பணியிடங்களும், ஸ்டோர் கீப்பர் (9) மற்றும் அசிஸ்டென்ட் (34) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் ஜனவரி 12, 2026 அன்று தேதிப்படி, 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இருப்பினும், உச்ச வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வுகள் அளிக்கப்படும்.
எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு (பொது/இ.டபிள்யூ.எஸ்) 10 ஆண்டுகள், எஸ்.சி/எஸ்.டி மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள், ஓபிசி மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
இந்த பணியிடங்களுக்கு டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். கல்வித் தகுதிகள் பற்றிய முழு விவரங்களை அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சம்பளம் எவ்வளவு?:
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் சம்பளம் 77 ஆயிரம் வரை வழங்கப்படும். சீனியர் ஷிப் டிராஃப்ட்ஸ்மேன், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், லேபரட்டரி அசிஸ்டென்ட் மற்றும் ஸ்டோர் கீப்பர் போன்ற பதவிகளுக்கு மாதம் ரூ. 23,500 முதல் ரூ. 77,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ. 22,500 முதல் ரூ. 73,750 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக, Objective type online test நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்டமாக Practical Test-க்கு அழைக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை எஸ்.சி/எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கிடையாது. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ. 700/- கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், CSL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://cochinshipyard.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு டிசம்பர் 26, 2025 அன்று தொடங்கி ஜனவரி 12, 2026 அன்று முடிவடையும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://cochinshipyard.in/uploads/career/2a20e6ee216c34a71e146b11d9879367.pdf












Click it and Unblock the Notifications