கொச்சின் ஷிப்யார்டு.. மத்திய அரசின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தில் 308 பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் என்பது அரசு பொதுத்துறை நிறுவனமாகும். மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனமாக உள்ளது.

பயிற்சி பணியிடங்கள்
கப்பல் பழுதுபார்க்கும் பணிகளிலும் இந்த நிறுவனம் செயல்படுகிறது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இந்த நிறுவனத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அதேபோல் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன.
அந்த வகையில், பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* ஐடிஐ அப்ரெண்டீஸ்: 300
* தொழில்நுட்ப வல்லுநர் (Vocational) அப்ரெண்டீஸ்: 08 என மொத்தம் 308 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
ஐடிஐ அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடத்தில் எலக்ட்ரிஷியன், ஃபிட்டர், வெல்டர், மெக்கானிஸ்ட், எலக்ட்ரானிக் மெக்கானிக் என 16 வகையான பயிற்சி பணியிடங்கள் ஐடிஐ பிரிவில் உள்ளன.
கல்வி தகுதி:
பத்தாம் வகுப்பு கல்வி தகுதியுடன் ஐடிஐ முடித்தவர்களும் 12 ஆம் வகுப்பில் வோகேஷனல் டெக்னீஷியன் பிரிவு படித்தவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தேர்வர்கள் பயிற்சி பணியிடங்களில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
வயது வரம்பு:
குறைந்தபட்சம் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது உச்சவரம்பில் தளர்வு உண்டு. தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.11 ஆயிரம் பயிற்சி தொகையாக அளிக்கப்படும். விண்ணப்பிக்க வரும் 15.11.2025 கடைசி நாளாகும்.
தேர்வு முறை:
ஐடிஐ பிரிவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரே மதிப்பெண்கள் இரு தேர்வர்கள் பெற்று இருந்தால் வயது அடிப்படையில் சீனியாரிட்டி கணக்கிட்டு தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர் கேரளாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
ஆன்லைன் வழியாக தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்வது அவசியம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://cochinshipyard.in/uploads/career/91a5a9ca68b53a822d46247818d9ce81.pdf












Click it and Unblock the Notifications