சென்னை - கோவையில் ஐடி வேலை.. Cognizant-ல் ரூ.6.75 லட்சம் வரை சம்பளம்.. ஜூன் 2 கடைசி நாள்
சென்னை: சென்னை, கோவை உள்பட 9 இடங்களில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜூன் 2ம் தேதி கடைசி நாளாகும்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட்டில் (Cognizant) இருந்து தற்போது இன்ஜினியரிங் கிராசூவேட்களுக்கான GenC Next, GenC and Gen C பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு முன்அனுபவம் என்பது தேவையில்லை. அதாவது 2025ம் ஆண்டில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். லெதர் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது.
மற்றவர்கள் என்றால் 60 சதவீத மதிப்பெண்ணுடன் 10, பிளஸ் 2, டிப்ளமோ, யுஜி, பிஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். 59.9 சதவீத மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்தவர்களும், அரியர்ஸ் இருப்பவர்களுக்கும் அனுமதியில்லை.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.6.75 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்படும். இந்த பணிக்கு Cognizant இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்யலாம். ஜூன்2ம் தேதி நள்ளிரவு11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இந்த பணிக்கான விபரங்கள் அனைத்தும் Superset-ல் பதிவு செய்யப்படும் இ-மெயில் ஐடி மூலம் தான் தெரிவிக்கப்படும். இதனால் சொந்த மெயில் ஐடியை வழங்க வேண்டும். ஒருமுறை இ-மெயில் முகவரி கொடுத்த பிறகு அதனை மீண்டும் மாற்றம் செய்ய முடியாது. இதனால் கவனமாக சரியான இ-மெயில் முகவரியை கொடுக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மொத்தம் 9 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, கோவையில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுதவிர பெங்களூர், ஹைதராபாத், புனே, கொல்கத்தா, புவனேஸ்வர், இந்தூரில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் நிறுவனங்களிலும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications