13 பிரிவுகளில் வேலைவாய்ப்பு.. Cognizant வெளியிட்ட மேஜர் அறிவிப்பு.. டிச.7ல் சென்னையில் இண்டர்வியூ
சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மொத்தம் 13 பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான இண்டர்வியூ சென்னையில் டிசம்பர் 7 ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் (Cognizant) உள்ளது. Cognizant Technology Solutions Corporation எனும் இந்த நிறுவனம் தமிழகத்தில் சென்னையில் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி தற்போதைய அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது டெவலப்பர் (Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 13 பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி 1. Azure Databricks Developer, 2. Python Developer, 3. AWS Developer, 4. Informatica Developer, 5. Pyspark Developer, 6.IICS Developer, 7.Azure Data Factory Developer, 8. Snowflake Developer, 9.GCP Developer, 10.Spark Developer, 11.Abinitio Developer, 12. Data Stage Developer, 13.Tableau Developer உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மேற்கூறிய பிரிவுகளில் குறைந்தபட்சம் 4 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதிகபட்சம் 12 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதாவது 4 முதல் 12 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பணிக்கான சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்பட உள்ளது. இண்டர்வியூ என்பது டிசம்பர் 7 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் Cognizant TCO Chennai-ல் இண்டர்வியூ நடைபெற உள்ளது. நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
அன்றைய தினம் மதியம் 12 மணி வரை செல்வோருக்கு இண்டர்வியூவில் அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்பிறகு செல்வோருக்கு அனுமதி என்பது கிடையாது. இண்டர்வியூ செல்ல விரும்புவோர் Resume, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்பட தேவையான ஆவணங்களுடன் செல்ல வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 7 ம் தேதி இண்டர்வியூவில் பங்கேற்று பயன்பெறலாம்.
பணிக்கான அறிவிப்பு பற்றி அறிந்து கொள்ள Click Here
-
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications