3 பிரிவில் வேலை.. காக்னிசண்ட் தரும் அசத்தலான வாய்ப்பு.. ஆன்லைனில் டிச.,21 ல் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் 3 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ ஆன்லைனில் டிசம்பர் 21 ம் தேதி நடைபெற உள்ளது.

பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் காக்னிசண்ட் நிறுவனம் இயங்கி வருகிறது.

it jobs job

இந்நிலையில் தான் நாடு முழுவதும் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போது காக்னிசண்ட் நிறுவனத்தில் Big Query, Databricks, GCP Dataflow உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் அதிகபட்சமாக 9 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இப்போது வெளியாகி உள்ள அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்பட உள்ளது. பணி அனுபவத்தின் அடிப்படையில் நல்ல சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது டிசம்பர் 21 ம் தேதி Virtual முறையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். டிசம்பர் 21 ம் தேதி இண்டர்வியூ என்பதால் அதற்கு முன்பாகவே விண்ணப்பம் செய்வது நல்லது.

இது ஒரு PAN India பணியாகும். இதனால் தேர்வாகும் நபர்கள் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம். சென்னையிலும் காக்னிசண்ட் நிறுவனம் செயல்படுகிறது. இதனால் அங்கும்கூட பணி கிடைக்கலாம். இதனால் விருப்பம் உள்ளவர்கள் தவறாமல் ஆன்லைன் இண்டர்வியூவில் பங்கேற்று பயன் பெறலாம்.

பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+