"Cognizant வேலைவாய்ப்பு".. பிஇ, பிஎஸ்சி, பிகாம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..சென்னையிலேயே பணி
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் (Congnizant) ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Hybrid முறையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் (Congnizant) உள்ளது. காக்னிசண்ட் நிறுவனம் என்பது நிதி, சுகாதாரம், சில்லறை வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் தேவையான டெக்னாலஜி சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.

நம் நாட்டின் பல்வேறு நகரங்களில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் நிறுவனத்தில் அசோசியேட் - ப்ராஜெக்ட்ஸ் (Associate - Projects) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இருப்பினும் எத்தனை பேர் தேர்வு செய்யயப்பட உள்ளனர் என்பது பற்றிய எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த பணிக்கு பிஎஸ்சி, பிகாம், இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்கள் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்களுக்கு New Relic, Dynatrace, Azure Paas, Monitoring தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் எஸ்ஓபி ஆஸ்ஓபி ஆக்டிவிட்டிவ் பணியை செய்ய வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கான சம்பளம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
தேர்வாகும் நபர்களுக்கு Hybrid பணி வாய்ப்புள்ளது. இதனால் வாரத்தில் சில நாட்கள் அலுவலகம் செல்லாமலே வீடுகளில் இருந்து வேலை செய்ய முடியும். வாரத்தில் சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை தினமாகும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Cognizant இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் இந்த பணியை விரும்புவோர் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications