Excel தெரிந்தாலே போதும்.. சென்னையில் காத்திருக்கும் ஐடி வேலை.. அழைக்கும் Cognizant
சென்னை:பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் (Congnizant) இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
நம் நாட்டில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் (Cognizant Technology Solutions Corporation) இயங்கி வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது அடுத்தடுத்து இந்த நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் என்பது வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை காக்னிசண்ட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் நிறுவனத்தில் ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ் - வாய்ஸ் (Process Executive - Voice) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு எம்எஸ் எக்ஸலில் (MS Excel) பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். எம்எஸ் எக்ஸலில் டேட்டா அனலிஸ் மற்றும் ரிப்போர்ட்டிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் பைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட்டிங் பிரிவில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஆர்கனைசேஷனல் ஸ்கில்ஸ், நல்ல கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், மற்றவர்களுடன் சரளமாக உரையாடும் திறன் இருக்கவேண்டும். அதேபோல் தனிப்பட்ட நபராகவும், டீமாகவும் சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இதுதவிர விண்ணப்பம் செய்வோருக்கு CAPP எனும் Certified Accounts Payable Professional அல்லது பைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட் தொடர்பான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கான சம்பளம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு Cognizant அலுவலகத்தின் இணையதள பக்கத்தில் இருந்து விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Cognizant இணையதளம் மூலம் முன்கூட்டியே விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications