நவம்பர் 23ல் இண்டர்வியூ.. சென்னை - கோவையில் பணி.. அழைக்கும் Cognizant

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட்டில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னையில் நவம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை மற்றும் பெங்களூர் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

நம் நாட்டில் செயல்பட்டு வரும் பிரபலமான ஐடி நிறுவனமாக காக்னிசண்ட்(Cognizant) உள்ளது. இந்த நிறுவனம் தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

it jobs job jobs

அதேபோல் பிற மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களிலும் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் காக்னிசண்ட்டில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போதைய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பின் முழு விபரங்கள் வருமாறு: தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் நிறுவனத்தில் ஏடபிள்யூஎஸ் இன்ஜினியர் (AWS Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் அதிகபட்சம் 9 ஆண்டுகள் வரை பணியாற்றி இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஏடபிள்யூ சர்வீசஸ்களான Glue,Lambda, Amazod Reshift உள்ளிட்டவற்றை பயன்படுத்தி டிசைன், டெவலப், டெஸ்ட், டெப்ளாய், Maintain Scalable data pipelines உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. பணிக்கான சம்பளம் பற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, பெங்களூர் என 3 நகரங்களில் செயல்படும் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கான இண்டர்வியூ என்பது நவம்பர் 23ம் தேதி (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் Cognizant Technology Solutions, Okkiyam Thoraipakkam, Chennai என்ற முகவரிக்கு சென்று இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

பணிக்கான அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+