‛நாளை இண்டர்வியூ’.. காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு.. செம சான்ஸ்
சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை நடைபெற உள்ளது. இதில் யாரெல்லாம் பங்கேற்கலாம் என்பது பற்றிய விபரம் வருமாறு:
ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவது பலருக்கும் கனவாக இருக்கிறது. நம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் டிசிஎஸ், காக்னிசண்ட், ஜோஹோ, எச்சிஎல் உள்பட பல முன்னணி ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

காக்னிசண்ட் (Cognizant) நிறுவனம் தமிழகத்தில் சென்னை, கோவையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
காக்னிசண்ட் ஐடி நிறுவனம் தற்போது 17 ஸ்கில்செட் உள்ளவர்களை பணிக்கு தேர்வு செய்ய உள்ளது. அதன்படி Databricks, python, snowflake, IICS, MSBI, PYspark, ETL Testin, Azure Data Factory, Informatica, Google Bigquery, DB Scripign, Big Data, Tableau, GCP services, Spark/SCAla, Teradata, Palantir உள்ளிட்ட ஸ்கில்செட் உள்ளவர்கள் மட்டும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
மற்றவர்களுக்கு இந்த இண்டர்வியூவில் பங்கேற்க அனுமதி என்பது கிடையாது. அதோடு அவர்களுக்கு குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் 12 ஆண்டு வரை பணி அனுபவம் இருக்க வேண்டும். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது நாளை (பிப்ரவரி 22) நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது Face To Face முறையில் நடக்கும்.
இண்டர்வியூவில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் நாளை Cognizant Office, Plot 23, 26/27, ISB Road, Financial District, Nanakramguda, Hyderabad - 500032 என்ற முகவரியில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். நாளை மதியம் 12 மணி வரை இண்டர்வியூக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இந்த பணியை விரும்புவோர் Resume-யை [email protected] முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்பிறகு Resume, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, உரிய ஆவணங்கள், சான்றிதழ்களுடன் இண்டர்வியூ நடக்கும் இடத்துக்கு செல்வது நல்லது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். அதுபற்றிய கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications