நவம்பர் 23ல் இண்டர்வியூ.. Cognizant நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை! சூப்பர் சான்ஸ்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது சென்னையில் நவம்பர் 23ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் (Cognizant) உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தற்போது காக்னிசண்ட்டில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போதைய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பின் முழு விபரங்கள் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி சென்னையில் இயங்கி வரும் காக்னிசண்ட் நிறுவனத்தில் பைத்தான் டெவலப்பர் (Python Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் அதிகபட்சம் 9 ஆண்டுகள் வரை பணியாற்றி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. பணிக்கான சம்பளம் பற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணியை விரும்புவோர் காக்னிசண்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் உள்ள அறிவிப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் நேரடியாக பங்கேற்கலாம்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பணிக்கான இண்டர்வியூ என்பது நவம்பர் 23ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் விண்ணப்பதாரர்கள் Cognizant TCO, Okkiyampet, Thoraipakkam, Chennai 600 097 என்ற முகவரிக்கு சென்று இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
இண்டர்வியூ செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு உரிய சான்று, ஆவங்ணங்களுடன் நவம்பர் 23ம் தேதி காலையிலேயே செல்வது நல்லது. இதன்மூலம் கடைசி கட்ட பரபரப்பை தவிர்க்க முடியும்.
பணிக்கான அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications