Cognizant ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. பிப்ரவரி 1ம் தேதி இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள காக்னிசண்ட் சார்பில் அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போதைய பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 1ம் தேதி நடைபெற உள்ளது.

காக்னிசண்ட்.. பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இது உள்ளது. தமிழகத்தில் இந்த ஐடி நிறுவனம் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

it jobs job

இந்நிலையில் தான் தற்போது காக்னிசண்ட் நிறுவனத்தில் Qliksense Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

காக்னிசண்ட் நிறுவனத்தில் Qliksense Developer பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் அதிகபட்சம் 9 ஆண்டு வரை அனுபவம் இருக்க வேண்டும். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி மாதம் 1ம் தேதி நடைபெற உள்ளது.

இண்டர்வியூ என்பது COG Deccan Campus Cognizant Technology Solutions India Private Limited, Plot No.16, Phase III, Rajiv Gandhi Info tech Park, Hinjewadi, Pune, Pune MH 411057 என்ற முகவரியில் நடைபெற உள்ளது இதனால் தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் இந்த முகவரிக்கு பிப்ரவரி மாதம் 1ம் தேதி செல்ல வேண்டும்.

இது ஒரு PAN INDIA பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் நியமனம் செய்யபடலாம். அதிர்ஷ்டம் இருப்பின் சென்னை, கோவையில் கூட பணி வாய்ப்பு என்பது கிடைக்கும். இப்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த சம்பளம் என்பது பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் பிப்ரவரி மாதம் 1 ம் தேதி புனேவில் நடக்கும் காக்னிசண்ட் நிறுவனத்தின் இண்டர்வியூவில் உரிய ஆவணங்களுடன் சென்று பங்கேற்கலாம்.

பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+