வீட்டில் இருந்தே வேலை.. ஆஃபிஸ் போக வேண்டாம்.. Cognizant தரும் சூப்பர் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் சார்பில் டிரெய்னி - ஜூனியர் டேட்டா அனலிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மிஸ் செய்யாமல் விண்ணப்பம் செய்யலாம்.

காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷன்(Cognizant Technology Solutions Corporation) எனும் நிறுவனம் சுருக்காக காக்னிசண்ட் என அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் சென்னையிலும் செயல்பட்டு வருகிறது. அதேபோல் நம்நாட்டில் உள்ள பிற முக்கிய நகரங்களிலும் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

it jobs jobs job

இந்நிலையில் தான் காக்னிசண்ட் சார்பில் வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வது எப்படி? யார் விண்ணப்பம் செய்யலாம்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் நிறுவனத்தில் டிரெய்னி - ஜூனியர் டேட்டா அனலிஸ்ட் (Trainee - Data Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி ப்ராஜெக்ட்டுகளுக்கு உதவி செய்யும் வகையில் பணி என்பது இருக்கும்.

இந்த பணிக்கு Process Executive - CDM/PV-ல் 0 முதல் 3 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் அவர்களுக்கு சில தகுதிகள் என்பது அவசியம்.அதன்படி பார்த்தால் இந்த பணிக்கு generative AI Technologies and their Applications பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும்.

டேட்டா அனலிசிஸ் மற்றும் மாடல் ஆப்டிமிசேஷனில் அனுபவம் இருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் ட்ரபிள்சூட் டெக்னிக்கல் பிரச்சனையை தீர்க்க தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ரிசர்ஜ் மற்றும் டெவலப்மென்ட், பிவி கேஸ் ப்ராசசிங்கில் ஆர்வம் இருக்க வேண்டும்.

அதேபோல் டாக்குமென்டேஷன் மற்றும் ரிப்போர்ட்டிங் திறமை இருக்க வேண்டும். அதேபோல் AI டெக்னாலஜி பற்றிய புதிய விஷயங்களில் தெரிந்து வைத்து கொள்வதில் அதிக ஆர்வம் இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக Ceritfied AI Practitioner Data Science Certification அல்லது Equivalent இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த தகவல் அறிவிப்பில் இல்லை. திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Cognizant இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி இன்னும் குறிப்பிடவில்லை.

இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். பணி பற்றிய அப்டேட்களை மும்பையில் செயல்படும் காக்னிசண்ட் நிறுவனத்தில் ரிப்போர்ட் செய்ய வேண்டியிருக்கும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+