Cognizant வேலைவாய்ப்பு.. சென்னையில் ஜனவரி 25ம் தேதி இண்டர்வியூ.. அசத்தலான சான்ஸ்
சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ என்பது சென்னையில் ஜனவரி 25ம் தேதி நடைபெறுகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் (Cognizant) செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவையில் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய முழுவிபரங்கள் வருமாறு:
காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது Pyspark Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 முதல் 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பிரைமரி ஸ்கில்லாக Pyspark Developer என்பது இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு PAN India பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் நம் நாட்டில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படலாம். அதிர்ஷ்டம் இருப்பின் சென்னை, கோவையில் கூட பணி செய்யும் வாய்ப்பு கிடைக்கலாம். இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னையில் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் Cognizant Technology Solutions, Elcot, CKC, Sholinganallur, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். ஜனவரி 25ம் தேதி மதியம் 2 மணி வரை செல்வோருக்கு இண்டர்வியூவில் பங்கேற்க அனுமதியுண்டு. அதன்பிறகு செல்வோருக்கு அனுமதியில்லை இங்கே கவனிக்கத்தக்கது.
இதனால் திட்டமிட்டு Resumes, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, உரிய ஆவணங்கள், சான்றிதழ்களுடன் இண்டர்வியூ நடக்கும் இடத்துக்கு செல்வது நல்லது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். அதுபற்றிய கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications