Cognizant வேலைவாய்ப்பு.. கோவையில் ஜனவரி 11ம் தேதி இண்டர்வியூ! நல்ல சான்ஸ்
கோவை: இந்தியா முழுவதும் காக்னிசண்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ கோவையில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் நிறுவனத்தில் ஜனவரி 11ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்று பயன்பெறலாம்.
தமிழகத்தில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் காக்னிசண்ட் (Cognizant). தமிழகத்தில் சென்னை, கோவையில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் காக்னிசண்ட் நிறுவனம் சார்பில் ஜனவரி 11ம் தேதி பல்வேறு பணியிடங்களுக்கு இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது.
அதன்படி Snowflake Developer பணிக்கான இண்டர்வியூ என்பது கோவையில் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சம் 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கான இண்டர்வியூ கோவையில் ஜனவரி 11ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் Cognizant Technologies, Chill Special Economic Zone, Keeranatham Village, Saravanampatti, Coimbatore - 641035 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். ஜனவரி 11ம் தேதி மதியம் 2 வரை செல்வோருக்கு இண்டர்வியூவில் பங்கேற்க அனுமதியுண்டு. அதன்பிறகு செல்வோருக்கு அனுமதியில்லை.
இண்டர்வியூவுக்கு செல்வோர் Resumes மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைத்திருக்க வேண்டும். இது ஒரு PAN India வேலையாகும். இதனால் இண்டர்வியூவில் தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம். அதிர்ஷ்டம் இருப்பின் சென்னை, கோவையிலும் பணி வாய்ப்பு கிடைக்கலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். அதுபற்றிய கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 11ம் தேதி கோவையில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications