கோவை மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை.. 8 ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.. ரெடியா
கோவை: கோவை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 29 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியிடங்களுக்கான அறிவிப்பு கோவை மாவட்ட அரசு இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மொத்தம் 29 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லம் விண்ணபிக்கலாம், கல்வி தகுதி, வயது வரம்பு என்ன? உள்ளிட்ட விவரங்களை கீழே காணலாம்.

பணியிடங்கள் விவரம்:
* Audiologist & Speech Therapist ஒலியியல் வல்லுநர் (ம) பேச்சு பிறழ்வு சிகிச்சையாளர் -01
* Radiographer (நுண்கதிர்வீச்சாளர்)-02
* Dental Technician (பல் தொழில்நுட்பாளர்)-01
* Operation Theatre Assistant (அறுவை அரங்கு உதவியாளர்)- 03
* Multi-purpose Hospital Worker (பல்நோக்கு மருத்துவ பணியாளர்) -02
* Security Guard/ Security (Female) (பாதுகாப்பு காவலர்/பாதுகாப்பு (பெண்)-08
* Security (காவலர்)-02
* Sanitary Worker துப்புறவு பணியாளர்-03
* Hospital Worker மருத்துவமனைப்பணியாளர்-03
* Sanitary Attendant சுகாதார உதவியாளர்-02
* Hospital Attendant மருத்துவமனை உதவியாளர்-02
என மொத்தம் 29 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி: ஆடியோலாஜிஸ்ட் பணியிடத்திற்கு பி.எஸ்.சி (Speech & Hearing) முடித்து இருக்க வேண்டும். ரேடியோகிராபர் பணிக்கு பி.எஸ்.சி ரேடியோ கிராபி முடித்து இருக்க வெண்டும். டெண்டல் டெக்னிஷியன் பணிக்கு டெண்டல் டெக்னலாஜி பிரிவில் டிப்ளமோ படித்து இருக்க வேண்டும். ஆபரேஷன் தியேட்டர் அஸ்சிஸ்டண்ட் பணிக்கு 3 மாதங்கள் கொண்ட ஒடி டெக்னிஷியன் கோர்ஸ் படித்து இருக்க வேண்டும். மருத்துவ பணியாளர், காவலர் உள்ளிட்ட இதர பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
சம்பள விவரம்: ஆடியோலாஜிஸ்ட் பணியிடத்திற்கு மாதம் ரூ. 23 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். ரேடியோகிராபர் பணிக்கு மாதம் ரூ.13,300 சம்பளமாக வழங்கப்படும். டென்டல் டெக்னிஷியன் பணிக்கு 12,600 ரூபாய் வழங்கபப்டும். வயது வரம்பை பொறுத்தவரை 20-35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆபரேஷன் தியேட்டர் பணிக்கு ரூ.11,200ம் சம்பளமாக வழங்கப்படும்.
இதற்கான வயது வரம்பு 45 க்கு மிகாமல் இருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட இதர பணியிடங்களுக்கு மாதம் ரூ.8,500 சம்பளம் வழங்கப்படும். பாதுகாவலர் பணிக்கு வயது வரம்பு 45-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதர பணிக்கு 20 முதல் 35 வயது உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் https://coimbatore.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை Member Secretary / Deputy Director Health Services District Health Society Office of Deputy Director Health Services, 219, Race Course Road, Coimbatore-18. என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் 05.10.2023 ஆகும்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications