ரூ.60,000 வரை சம்பளம்! கோவை மாவட்ட சுகாதாரத்துறையில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க
கோவை: கோவை மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள 54 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 8 ம் வகுப்பு முடித்தவர்கள் டிகிரி, நர்சிங், டாக்டர், சித்தா , யுனானி உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக சுகாதார சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளோடு அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது கோவை மாவட்ட சுகாதார நலச்சங்கத்தில் காலிப்பணியிட்ஙகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 54 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதுதொடர்பான முழுவிபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பார்த்து தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
ஆயுஷ் - யுனானி: ஆயுஷ் டாக்டர் (சித்தா) பிரிவில் 2 இடம் நிரப்பப்பட உள்ளது. பிஎஸ்எம்எம் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல் டிஸ்பென்சர் - சித்தா (Dispenser - Siddha) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். Diploma in Pharmacy (Siddha/Intrated) படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். மேலும் ஆயுஷ் மெடிக்கல் ஆபிசர் (சித்தா) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிஎஸ்எம்எஸ் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் ரூ.34 ஆயிரம் சம்பளத்தில் பணியை பெறலாம்.
இதுதவிர ஆயுஷ் மெடிக்கல் ஆபிசர் (யுனானி) பிரிவில் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். பியூஎம்எஸ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதமசம்பளமாக ரூ.34 ஆயிரம் வழங்கப்படும். டிஸ்பென்சர் (யுனானி) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். Diploma in Pharmacy (Unani/Intrated) படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் தினமும் ரூ.750 சம்பளத்தில் பணியை பெறலாம்.
மல்டி பர்பஸ் வொர்க்கர்: இந்த பணிக்கு மொத்தம் 9 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 8 ம் வகுப்பு பாஸ் செய்து தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தினசரி சம்பளமாக ரூ.300 வழங்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் தேசிய ஊரக சுகாதா திட்டத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.
அசிஸ்டென்ட்: டேட்டா அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இளங்கலை பட்டப்படிப்பை ஐடி, பிசிஏ, பிடெக் கம்ப்யூட்டர் சயின்ஸ், பிபிஏ, பிஎஸ்சி ஐடி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தெரபிஸ்ட் அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். டிப்ளமோ நர்சிங் தெரபி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த 2 பணிகளுக்கும் தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
மாவட்ட ப்ரோகிராம் மேனேஜர்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். மாதசம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். இளங்கலை பிரிவில் பிஏஎம்எஸ், பியூஎம்எஸ், பிஎச்எம்எஸ்,பிஎன்ஒய்எஸ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
லேப் டெக்னீசியன்: லேப் டெக்னீசியன் பணிக்கு ருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12ம் வகுப்பு முடித்து மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி எனும் ஓராண்டு படிப்பை முடித்திருக்க வேண்டும். இதற்கான சம்பளம் விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் திறமையை பொறுத்து நல்ல சம்பளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
எம்எல்எச்பி - பிசியோதெரபிஸ்ட்: MLHP பணிக்கு மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் டிஜிஎம்என், பிசிஎஸ்சி நர்சிங் படித்து 50 வயதுக்கள் உட்பட்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படம். மேலும் பிசியோதெரபிஸ்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இளங்கலையில் பிசியோதெரபிஸ்ட் படிப்பை முடித்து 21 மதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ரூ.13 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.
மெடிக்கல் ஆபிசர்: இந்த பணிக்கு மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எம்பிபிஎஸ் முடித்து 40 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மாத சம்பளமாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும்.
ஹெல்த் இன்ஸ்பெக்டர்: ஹெல்த் இன்ஸ்பெக்டர் கிரேட் - II பணிக்கு 12ம் வகுப்பில் உயிரியல், அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்துடன் முடித்து 35 வயதுக்குள் உள்ள பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.14 ஆயிரம் வழங்கப்படும்.
ஸ்டாப் நர்ஸ்: ஸ்டாப் நர்ஸ் பணிக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட .ள்ளனர். டிஜிஎன்எம், பிஎஸ்சி நர்சிங் முடித்து 50 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மாத சம்பளமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
டென்டல் சர்ஜன்: டென்டல் சர்ஜன் பணிக்கு 2 பேர் தேர்வு செய்ப்பட .ள்ளனர். பிடிஎஸ் முடித்து ஓராண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாத சம்பளமாக ரூ.34 ஆயிரம் வழங்கப்படும். டென்டல் அசிஸ்டென்ட் பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10 ம் வகுப்பு முடித்து ஓராண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாத சம்பளமாக ரூ.13,800 வழங்கப்படும். இந்த 2 பணிகளுக்கும் விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஆடியோலாஜிஸ்ட்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இளங்கலை பிரிவில் ஆடியோலஜி மற்றும் ஸ்பீச் லேங்குவேஜ் பதேலாஜி, பிஎஸ்சி பிரிவில் ஸ்பீச் மற்றும் ஹியரிங் படிப்பை முடித்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.23 ஆயிரம் வரை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: இந்த பணிகள் அனைத்தும் தற்காலிகமானவை. எந்த காலக்கட்டத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://coimbatore.nic.in இணையதளம் மூலம் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு நேரில் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த விண்ணப்பத்தோடு உரிய சுயயொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வழங்க வேண்டும். விண்ணப்பங்களை Member Secretary/Deputy Director Health Services, District Health Society, Office of Deputy Director Health Services, 219, Race Course Road coimbatore-18 என்ற முகவரிக்கு மார்ச் 20 ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications