Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசத்துங்க! மாதஊதியம் ரூ.29,000.. 10ம் வகுப்பு, டிகிரி முடித்தவரா நீங்க? கோவையில் மத்திய அரசு பணி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் வனமரபியல் மற்றும் மரவளர்ப்பு நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.29,200 வரை வழங்கப்பட உள்ளது.
கோவையில் வனமரபியல் மற்றும் மரவளர்ப்பு நிறுவனம்(ICFRE - Institute of Forest Geneitcs and Tree Breeding) செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இது செயல்பட்டு வருகிறது.

 Coimbatore ICFRE recruitment 2023 for Technical Assistant and MTS

இந்நிலையில் தான் கோவையில் உள்ள வனமரபியல் மற்றும் மரவளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: கோவை வனமரபியல் மற்றும் மரவளர்ப்பு நிறுவனத்தில் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 3 பேர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு 3 பேர் (பீல்ட்/லேப் பணிக்கு ஒருவர், மெயின்டனன்ஸ் பணிக்கு 2 பேர்)என மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு: மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரை தளர்வு வழங்கப்படும். டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி பிரிவை சேர்ந்தவர்கள் என்றால் 5 வயது வரை தளர்வு வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பு என்பது 30.09.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

கல்வி தகுதி: மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஎஸ்சி, டிப்ளமோ பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு இல்லாவிட்டால் பிஎஸ்சி தாவரவியல் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.29,200 சம்பளமாக வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 30ம் தேதி நள்ளிரவு 11 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு விண்ணப்பம் செய்ய கட்டணம் எதுவும் இல்லை. மாறாக டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.1,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, இஎஸ்எம் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ.750 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டள்ளது. விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+