குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. நாளை முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை சென்னையில் இண்டர்வியூ.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. முன்அனுபவம் தேவையில்லை. இந்த பணிக்கு நாளை (ஆகஸ்ட் 25) முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் சென்னையில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

சென்னை அமைந்தகரையில் CompIndia Infotech Pvt Ltd என்ற ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது மெஷின் லேனிங் இன்ஜினியரிங் (Machine Learning Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணி Fresher-களுக்கானது. இதனால் முன் அனுபவம் தேவையில்லை.

compindia-infotech-hiring-for-machine-learning-engineer-role-interview-from-august-25-to-september-5

இந்த பணிக்கு பிஇ/பிடெக் படிப்பை எந்த பிரிவுகளில் முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். அதேபோல் எம்சிஏ மற்றும் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். 2023, 2024, 2025ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல் அனலிட்டக்கல் மற்றும் ரீசனிங் ஸ்கில்ஸ் நன்றாக இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு பைத்தான் (Python) மற்றும் எம்எல் (ML) கோர்ஸ் முடித்திருப்பது, ML Projects with real world datasets, Kaggle Competitions மற்றும் Hackathons உள்ளிட்டவற்றில் பங்கேற்று இருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படிவல்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த நிறுவனத்தில் கடந்த 3 மாதத்துக்குள் ஏதாவது இண்டர்வியூவில் பங்கேற்று இருந்தவர்கள் தற்போது பங்கேற்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டர்வியூ ஆகஸ்ட் 25 (நாளை) முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அலுவலகம் விடுமுறை என்பதால் அன்றைய நாட்களில் இண்டர்வியூ கிடையாது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 51, 6th Floor, 3rd Wing, Nelson Towers, Nelson Manickam Road, Amijikarai, Chennai 600 029 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

பணி பற்றி கூடுதல் விவரங்களை அறிய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+