9,212 காலியிடம்.. 10ம் வகுப்பு முடித்தாலே போதும்.. அழைக்கும் சிஆர்பிஎப்! தமிழகத்திலும் பணி வாய்ப்பு
டெல்லி: மத்திய ரிசர்வ் போலீஸ் படைப்பிரிவில் காலியாக உள்ள 9212 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பல்வேறு பாதுகாப்பு படைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் முக்கியமான ஒன்று தான் சிஆர்பிஎப் எனும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையாகும் (Central Reserve Police Force or CRPF). இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கான்ஸ்டபிள் (டெக்னீக்கல்/டிரேட்ஸ்மேன்) பணிக்கு மொத்தம் 9,212 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி 9105 ஆண்கள், 107 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டிலும் பணி செய்ய வாய்ப்பு உள்ளது. ஆண்களை பொறுத்தமட்டில் 579 பேர் தமிழ்நாட்டில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.21,700 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் மத்திய அல்லது மாநில அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில் 10, 12ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி, முன்னாள் படைவீரர்களுக்கு 3 வயது வரையும் விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வோர் கம்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, உடல்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு, டிரேட் தேர்வு, சான்று சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் http://www.crpf.nic.in எனும் இணையதளம் சென்று ஆன்லைனிலேயே 2023 ஏப்ரல் 25ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பூரில் மத்திய அரசு பள்ளியில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
IT JOBS: நாளை மதியம் இண்டர்வியூ.. HCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சென்னையில் பணி -
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி












Click it and Unblock the Notifications