CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம்
சென்னை: மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆண் மற்றும் பெண்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.21,700 முதல் ரூ. 69,100 வரை வழங்கப்படும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு பாதுகாப்பு படைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று தான் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) ஆகும். தற்போது சிஆர்பிஃபில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியிடங்கள் விவரம்:
மொத்தம் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்களை அறிவித்துள்ளது. இதில், கான்ஸ்டபிள் (தொழில்நுட்ப மற்றும் வர்த்தகர்) பிரிவில் மட்டும் 9195 பணியிடங்கள் உள்ளன. இவற்றில் ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 9096 இடங்களும், பெண் விண்ணப்பதாரர்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை 21 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அதாவது, 1999 ஜனவரி 2 க்கு முன்னரோ அல்லது 2005 ஜனவரி 1 க்கு பின்னரோ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். ST/SC பிரிவினருக்கு 5 ஆண்டுகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு OBC (NCL) 3 ஆண்டுகள் சலுகை உண்டு.
சம்பளம் எவ்வளவு:
அனைத்து கான்ஸ்டபிள் பதவிகளுக்கும் நிலை-3இன் படி சம்பளம் வழங்கப்படும். அதாவது ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை:
உடற்தகுதித் தேர்வு (PET), உடல் தரநிலைத் தேர்வு (PST), கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), வர்த்தகம்/திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு (DV), மற்றும் விரிவான மருத்துவ பரிசோதனை (DME) / மறு சீராய்வு மருத்துவ பரிசோதனை (RME) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பெண் விண்ணப்பதாரர்கள், பட்டியல் சாதிகள்/பழங்குடியினர் (ST/SC) மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் CRPF-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.rect.crpf.gov.in/ல் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2026 ஏப்ரல் 20 முதல் 2026 மே 19 வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://drive.google.com/file/u/0/d/18__bLAhDI2v0RIPImz_fdwLwq-tEfMVN/view?usp=sharing&pli=1
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications