Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரைவருக்கு ரூ.43,000 - டிப்ளமோ, டிகிரி படித்தோருக்கு ரூ.73,734 வரை ஊதியம்! CSIR-யில் வேலை ரெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிஎஸ்ஐஆர் -4 பிஐ நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிரைவர், டெக்னீசியன் பணிக்கு மாதம் ரூ.43,000 வரையும், டெக்னீக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ.73,734 வரையும் மாதசம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின கட்டுப்பாட்டில் சிஎஸ்ஐஆர் எனும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (Council of Scientific and Industrial Research or CSIR) செயல்பட்டு வருகிறது.

 CSIR Fourth Paradigm Institute recruitment 2024 for various jobs including Technical Assistant

இந்த கவுன்சிலின் கீழ் சிஐஎஸ்ஆர் - 4 பிஐ ( CSIR-4 PI or Fourth paradigm institute) எனும் நிறுவனம் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: சிஐஎஸ்ஆர் - 4 பிஐ நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு 15 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டெக்னீசியன் பணிக்கு ஒருவரும், டிரைவர் பணிக்கு ஒருவர் என மொத்தம் 17 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்,எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், சிவில், இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்ஜினீயரிங், மெக்கானிக்கல், பிஎஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல், அக்ரிகல்சர், பிசிஏ உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

டெக்னீசியன் பணிக்கு 10ம் வகுப்பு முடித்து ஐடிஐயில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்ட் ப்ரோகிராமிங் அசிஸ்டென்ட் (COPA or கோபா) அல்லது நெட்வொர்க் டெக்னீசியன் படிப்பை முடித்திருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்படன் லைட் மற்றும் ஹெவி லைசென்ஸ் வைத்து 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு: டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன் பணிக்கு 28 வயதுக்குள்ளும், டிரைவர் பணிக்கு 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி என்றால் 5 வயது வரையும், ஓபிசி என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 15 வயது வரையும் தளர்வு என்பது அளிக்கப்படும்.

மாத சம்பளம்: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.73,734 வரை சம்பளமாக வழங்கப்படும். டெக்னீசியன், டிரைவர் பணிக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.40,466 வரை சம்பளமாக வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://csir4pi.res.in/ எனும் இணையதளம் மூலம் பிப்ரவரி மாதம் 29ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி, பெண்கள், சிஎஸ்ஐஆர் ஊழியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. இப்படி விண்ணப்பம் செய்வோர் திறனறி தேர்வு, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+