அனுபவம் வேண்டாம்.. ரூ.4 லட்சம் சம்பளத்தில் காத்திருக்கும் வேலை.. அழைக்கும் பிரபல நிறுவனம்
சென்னை: முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக டெலாய்ட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனுபவம் இல்லாதவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளத்துடன் பிற சலுகைகளும் வழங்கப்பட உள்ளது.
டெலாய்ட் (Deloitte) நிறுவனம் தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதுதவிர பிற மாநிலங்களின் பல்வேறு இடங்களிலும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் டெலாய்ட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: டெலாய்ட் நிறுவனத்தில் இருந்து தற்போது அனலிஸ்ட் டிரெய்னி பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன்ல டெக்னாலஜி, அலைட் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஸ்ட்ரிம்ஸ் மற்றும் அனைத்து சர்க்யூட்டல் பிராஞ்சஸில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் எம்டெக், அல்லது IMtech 5 ஆண்டு படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜியில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மேலும் எம்சிஏ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக இந்த படிப்பை அனைவரும் 2025ம் ஆண்டில் முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பம் செய்வோருக்கு புரோகிராமிங் லேங்குவேஜில் கோடிங் எழுத தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் மைக்ரோசாப்ட் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட்டில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். நல்ல அனலிட்டிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். எந்த பணியாக இருந்தாலும் தனியாக செய்ய தயாராகஇருக்க வேண்டும். ஸ்டாக்ஹோல்டரிடம் நேருக்கு நேராக பேச தெரரிந்திருக்க வேண்டும். குளோபல் கிளைன்ட் உடனும் உரையாட தெரிந்திருக்க வேண்டும்.
இதுதவிர ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஓராண்டு காலம் Probation காலம் இருக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் எங்கு நியமனம் செய்யப்படுவார்கள் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதுதவிர Variable benefits-ம் உண்டு.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டெலாய்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விபரங்களை படித்து தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அறிவிப்பு மற்றும் கூடுதல் விபரங்கள் அறிய Click Here
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications